ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் அருகே கோட்டைக்காடு பகுதியை சேர்ந்த காந்தியின் மகன் ராம்குமார் (35). இவர் தனது மனைவியின்  ஊரான ஆவரேந்தல் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு ஆவரேந்தல் கிராமத்தில் இருந்து காய்கறிகள் வாங்குவதற்காக ஆர்.எஸ். மங்கலம் சந்தைக்கு தனது இருசக்கர ஸ்கூட்டி வாகனத்தில் வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், கீழக் கோட்டை மிளகாய் கிடங்கு அருகில் அவர் வந்த போது சாலையின் குறுக்கே நாய் வந்ததால் இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி  கீழே விழுந்து விபத்து  ஏற்பட்டது. இந்த சமப்வத்தில், ஆர்.எஸ். மங்கலத்தில் இருந்து வந்த அரசு பேருந்து ஒன்று ராம்குமார்  மீது மோதியதில் அவர் தலை நசுங்கி  நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் படிக்க | VIDEO: பென்ஸ் மீது மோதிய பின் இரண்டாய் பிளந்த டிராக்டர்!

தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு வந்த ஆர்.எஸ். மங்கலம் போலீஸார் ராம்குமார் உடலை கைப்பற்றி உடல்கூறாய்விற்காக திருவாடானை அரசு தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது மனைவி கார்த்திகா ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | கேரளாவில் கோர விபத்து; BMW காரில் மோதி தூக்கி வீசப்பட்ட இருவர்! 

மேலும் படிக்க | Jalpaiguri: துர்கா பூஜை சிலைக் கரைப்பின் போது ஆற்றில் வெள்ளம்: 7 பேர் பலி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link