வானிலை தகவல்: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், அரியலூர்,  திருச்சிராப்பள்ளி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல நாளை (19.08.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிமை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் வானிலை எப்படி இருக்கும்?

சென்னையை பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அதேபோல அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

18.08.2022: ஆந்திர கடலோர பகுதிகள், குமரிக்கடல்  பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

19.08.2022: மத்தியமேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய வட ஆந்திர கடலோர பகுதிகள், தெற்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் சூறாவளி காற்று மணிக்கு  40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

20.08.2022: மத்தியமேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய வட ஆந்திர கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

21.08.2022, 22.08.2022: மன்னார் வளைகுடா, குமரிக்கடல்  பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): 

6 சென்டிமீட்டர்:
திருவள்ளூர் 

5 சென்டிமீட்டர்:
ACS மருத்துவ கல்லூரி (காஞ்சிபுரம்), கடலூர், தாம்பரம்  (செங்கல்பட்டு), பெருங்கலூர் (புதுக்கோட்டை)

4 சென்டிமீட்டர்:
கீரனுர் (புதுக்கோட்டை), பூந்தமல்லீ  (திருவள்ளூர்), ஆம்பூர் (திருப்பத்தூர்), பலவிடுதி (கரூர்).

3 சென்டிமீட்டர்:
செம்பரபக்கம் (திருவள்ளூர்), கொரட்டூர் (திருவள்ளூர்), மணப்பாறை (திருச்சி  ), மைலம்பட்டி (கடலூர்), சென்னை  விமான நிலையம் (சென்னை), கோவில்பட்டி (திருச்சி), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), கலவை AWS (ராணிப்பேட்டை), படலுர் (பெரம்பலூர்).

2 சென்டிமீட்டர்:
காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), மருங்காபுரி (திருச்சி), ராசிபுரம் (நாமக்கல்), அன்னவாசல் (புதுக்கோட்டை), போலூர்(திருவண்ணாமலை), திருச்செங்கோடு (நாமக்கல்), செய்யார் (திருவண்ணாமலை), சங்கராபுரம்  (கள்ளக்குறிச்சி), பஞ்சப்பட்டி (கரூர்), குடியாத்தம் (வேலூர்), உசிலம்பட்டி (மதுரை), பூண்டி (திருவள்ளூர்).

1 சென்டிமீட்டர்:
கங்கவல்லி (சேலம்), திருவாலங்காடு (திருவள்ளூர்), ராஜபாளையம் (விருதுநகர்), செங்கல்பட்டு, செட்டிகுளம் (பெரம்பலூர்) , நாமக்கல்,  குளித்தலை (கரூர்), தொழுதூர் (கூடலூ), திருத்தணி (திருவள்ளூர்), திருமங்கலம் (மதுரை), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), மங்களாபுரம் (நாமக்கல்) , ஆண்டிபட்டி (தேனீ), விராலிமலை (புதுக்கோட்டை), சங்கரிதுர்க் (சேலம்), செங்கம் (திருவண்ணாமலை), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), பேராவூரணி (தஞ்சாவூர்), வானுர் (விழுப்புரம்).

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Source link