வந்தே பாரத் ரயில்: பயணிகளின் நீண்ட நேர பயணத்தை எளிதாக்குவதற்காக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. முக்கிய நகரங்களை அதிவேகத்தில் இணைக்கும் வகையில் நாடு முழுவதும் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கப்பட்டு பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரயில்வே இதுவரை 4 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்களை இயக்கியுள்ள நிலையில், இப்போது ஐந்தாவது ரயிலாக சென்னை- மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.

பெங்களூரு வழியாக சென்னை-மைசூரு இடையே இயக்கப்படும் இந்த ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வரும் 11ம் தேதி தொடங்கி வைக்கிறார். சென்னை சென்டிரலில் இருந்து புறப்படும் இந்த ரயில் காட்பாடி வழியாக பெங்களூர் சென்று மைசூரு சென்றடையும். இடையில் காட்பாடி மற்றும் பெங்களூர் நிலையங்களில் மட்டுமே இந்த ரயில் நிற்கும். தற்போது இந்த ரயில் இயங்கும் நேர அட்டவணை வெளியாகியுள்ளது. எனினும் இந்து இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை. சென்னை சென்ட்ரல்-பெங்களூரு-மைசூரு பயண நேரம் 6 மணி நேரம் 40 நிமிடங்கள். மைசூரு-பெங்களூரு-சென்னை 6 மணி நேரம் 30 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | 183 கி.மீ. வேகத்தில் சென்ற வந்தே பாரத் ரயில்… துளியும் சிந்தாத தண்ணீரின் வைரல் வீடியோ!

வந்தே பாரத் ரயில், புதன்கிழமையை தவிர்த்து வாரத்தில் மீதமுள்ள 6 நாட்களிலும் இயக்கப்படும் என கூறப்படுகிறது. 16 பெட்டிகளை கொண்டிருக்கும் இந்த ரயிலில், ஆட்டோமெட்டிக் கதவுகள், GPS அடிப்படையிலான ஆடியோ விஷுவல் தகவல் மையம், ஹாட்ஸ்பாட் Wifi, சொகுசு இருக்கைகள் என பல்வேறு நவீன வசதிகளை கொண்டிருக்கும். ஒவ்வொரு கோச்சிற்கும் தனித்தனியான பண்ட்ரி வசதியும் இருக்கும். இந்த ரயில் புறப்பட்ட 52 வினாடிகளில் மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும்.

சென்னை – மைசூரு இடையே பயணிக்க எகனாமி வகுப்பில் ரூ.921 கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன. அதேபோல், எக்ஸ்கியூட்டிவ் வகுப்பில் பயணிக்க 1,880 ரூபாயும் வசூலிக்கப்படும் என கூறப்படுகிறது. 

முதல் வந்தே பாரத் புது தில்லி-வாரணாசி இடையே அறிமுகப்படுத்தப்பட்டது. அதே நேரத்தில், இரண்டாவது ரயில் புது தில்லி-ஸ்ரீ வைஷ்ணோ தேவி மாதா கோயில் உள்ள கத்ரா இடையே இயக்கப்படுகிறது. மூன்றாவது ரயில் குஜராத் காந்திநகர் முதல் மும்பை வரையிலும், நான்காவது புது தில்லியில் இருந்து ஹிமாச்சலின் அம்ப் அண்டௌரா ஸ்டேஷன் வரையிலும் செல்லும் ரயில் ஆகும்.

மேலும் படிக்க | அசுர வேகத்தில் செல்லும் வந்தே பாரத் ரயில்கள்; செப் 30 முதல் ‘இந்த’ வழித்தடத்தில்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link