எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தால் ஒதுக்கப்பட்ட டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்திவருகிறார். அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட டிடிவி தினகரன் பேசுகையில், “வருங்காலத்தில் இணைவதாக இருந்தால், ஓபிஎஸ்அல்லது இபிஎஸ் உங்களுடைய சாய்ஸ் எதுவென்று என்னிடம் கேட்டனர். தேர்தல் கூட்டணி என்பது வேறு. ஒருவருடன் இணைவது என்பது வேறு என நான் சொன்னேன். அதில் ஓ.பன்னீர்செல்வம், தனக்கு பதவியில்லை, பிடுங்கிவிட்டார்கள் என்ற கோபத்தில், பிரிந்துசென்று செயல்பட்டு ஜெயலலிதாவின் ஆட்சிக்கு எதிராக வாக்களித்தார். அதன்பிறகு தவறை உணர்ந்து, ஒரு குடும்பத்தின் பிடியில் இந்த இயக்கம் இருக்கிறது என்று சொன்னதெல்லாம், தான் தவறாக சொல்லிவிட்டோம் என்பதை உணர்ந்தார். அதுபோல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு சசிகலாதான் காரணம் என்று பரப்பியவர்கள், எனக்கு அந்த சந்தேகம் இல்லை, மக்களுக்கு இருக்கிறது என்றெல்லாம் கூறியவர் தனது தவறை உணர்ந்து அதிலிருந்து மாறி வந்துவிட்டார்.

ஆனால், பழனிசாமி இன்னும் மாறவே இல்லை. மேலும் மேலும் துரோகங்களை செய்துகொண்டே இருக்கிறார். மேடையில் 4 கால் பிராணிபோல் தவழ்ந்து வந்து, முதலமைச்சர் பதவி கொடுத்த சசிகலாவுக்கு துரோகம் செய்தார். அந்த ஆட்சி நிலைக்க பாடுபட்ட நமக்கெல்லாம் துரோகம் செய்தார். அவர் தவறான வழியில் செல்கிறார், அவர் முதலமைச்சராக தொடரக்கூடாது என்று ஆளுநரிடம் மனு கொடுத்த 18 எம்எல்ஏக்களுக்கு துரோகம் செய்தார். அந்த ஆட்சி போய்விடுமோ என்ற நேரத்தில் மீண்டும் வந்து கைகொடுத்த பன்னீர்செல்வத்துக்கு துரோகம் செய்தார்.

Edappadi, OPS

எல்லாவற்றுக்கும் மேலாக 2017 செப்டம்ப்ர 12ஆம் தேதி பொதுச்செயலாளர் என்ற பதவி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மட்டும்தான். அதனால் அந்த பதவிக்கு யாரும் வரக்கூடாது என்று இதுபோன்ற பொதுக்குழுவில் முடிவு செய்துவிட்டு, இன்றைக்கு ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்கிற விதமாக தலைமைக் கழகத்தில் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கி, நீதிமன்றத்தில் பதில் சொல்ல முடியாமல் தவித்தது அனைவருக்கும் தெரியும்.

மேலும் படிக்க | பெரியாரின் சிலையை உடைக்க சொன்ன கனல் கண்ணன் கைது

ஒற்றைத் தலைமை வேண்டும் என்றால், அது பொதுச்செயலாளர் பதவி மட்டும்தான் இருக்க வேண்டுமா? வேறு ஏதாவது பதவிகளில் இருக்கலாம் அல்லவா. பொதுச்செயலாளர் பதவி ஜெயலலிதாவுக்குத்தான் என்றுகூறி அன்று பதவிக்கு வந்தவர், பன்னீர்செல்வத்தை ஏமாற்றிவிட்டார். அதுதான் மெஜாரிட்டி ஏன் 95 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்களே, தேர்தல் வைத்து நீங்கள் தலைமை பதவிக்கு வந்திருக்கலாமே.

Jaya, Sasi

மறைந்த தலைவர் ஜெயலலிதாவை தவிர யாருக்கும் பொதுச்செயலாளர் பதவி இல்லை என்று கூறிவிட்டு தற்போது அவருக்கும் துரோகம் செய்து வருகிறார்.எனவே அவர் திருந்தினால் பார்ப்போம். ஒருவேளை திருந்தினால் அவரோடு சேர்வது குறித்து பார்ப்போம். இருப்பினும், எனக்கு தெரிந்தவரை பழனிசாமி திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை” என்றார்.

மேலும் படிக்க | விருதுத்தொகையை திருப்பிக் கொடுத்து திகைக்க வைத்த நல்லக்கண்ணு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link