மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட செல்வதற்கு முன் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இரட்டை இலை சின்னம் இல்லாமல் எடப்பாடி பழனிசாமியால் எதுவும் செய்ய இயலாது. அவரது சொந்த ஊரில்கூட உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் வெற்றி பெற முடியாத நிலையே உள்ளது.

நாங்கள் புதிதாக கட்சியை ஆரம்பித்து தேர்தலை சந்தித்ததுபோல் எடப்பாடி பழனிசாமியால் சந்திக்க முடியுமா. இவர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தையே கட்சியை விட்டு நீக்கியவர். ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகள் ஓரணியில் திரண்டால்தான் எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற முடியும்.

மேலும் படிக்க | சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவின் பணியிட மாற்றத்தை ரத்து செய்க

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக தமிழக அரசின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. அவரது குடும்பத்திற்கு வழங்கிய இழப்பீடு, அரசு வேலை, வீடு என அரசு அறிவித்தது வரவேற்கத்தக்கது. இதனால் நான் திமுக கூட்டணிக்கு செல்வேன் என எதிர்பார்க்காதீர்கள். மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் என்பது மிக மிகக் குறைவு. இதனை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்” என்றார்.

மேலும் படிக்க | மோடிஜியை கண்டு வியந்து மகிழ்கிறேன் – காசியில் இளையராஜா பேச்சு

மேலும் படிக்க | ரூ.799 கோடி மதிப்பில் சத்துமாவு கொள்முதல் செய்வதற்கான டெண்டருக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

மேலும் படிக்க | சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவின் பணியிட மாற்றத்தை ரத்து செய்க

மேலும் படிக்க | Madras HC: தமிழக அரசு மருத்துவக் கல்லூரி கோர்ஸ் ஒதுக்கீடு10 நாட்களுக்கு ஒத்தி வைப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link