வடசென்னை ஐ.ஓ.சி நெடுஞ்செழியன் நகர் பகுதியில் வசித்துவரும் ரேவதி என்பவருக்கும் தண்டையார் பேட்டையைசேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. அப்போது மணமகன் தாலி கட்டும் நேரத்தில் பெண்ணிண் காதலன் என கூறப்படும் சதீஷ் மாப்பிள்ளையின் தாலியை தட்டி விட்டு தான் கொண்டு வந்த தாலியை கட்ட முற்பட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் தாலி கட்ட முற்பட்ட சதீஷை தடுத்து காவல் துறைக்கு தாவல் கொடுத்தனர்.

மேலும் படிக்க | திமுக கவுன்சிலர் வீட்டில் கொள்ளை; மிளகாய்பொடி தூவி செயினை பறித்துச் சென்ற மர்ம பெண்

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சதீஷை மீட்டு ஆர்.கே. நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் சதீஷும் மணப்பெண்ணும் இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. ஆனால், மணப்பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்படவே தன் காதலன் சதீஷை திருமணத்திற்கு அவர் வரவழைத்துள்ளார். அதன்படி அங்கு வந்த சதீஷ் தாலி கட்ட முற்பட்டார். அப்போது மணப்பெண்ணின் சகோதரர் அதனை தடுத்து நிறுத்தியுள்ளார்.

Marriage

தொடர்ந்து, மணப்பெண்ணின் சகோதரரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் மணப்பெண்ணிடமும் பெண் காவலர்கள் நடத்திய விசாரணையில் மணப்பெண் சதீஷை காதலிப்பதாகவும் அவர் தான் காதலர் சதீஷை வர சொன்னதாகவும் கூறியிருக்கிறார். 

மேலும் படிக்க | தந்தையின் மெழுகுசிலை முன்பாக திருமணம் செய்து கொண்ட மகன்: சேலத்தில் நெகழ்ச்சி சம்பவம்!!

இதனை தொடர்ந்து இருதரப்பினரிடமும் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் மணமகள் வீட்டார் இன்று ஏற்பாடு செய்திருந்த திருமணமும் நிறுத்தப்பட்டது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

மேலும் படிக்க | சிவகங்கை அருகே தலைமை ஆசிரியை கொடூர கொலை – 20 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளை !!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link