இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்திற்கு வெளிமாவட்டம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் தருகின்றனர். இதையடுத்து, பள்ளி காலாண்டு தேர்வுகள் முடிந்து நவராத்திரி விழா, ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையைப் போன்ற தொடர் விடுமுறை ஒட்டி இராமேஸ்வரத்திற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

பள்ளி விடுமுறையை முன்னிட்டு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் ராமேஸ்வரத்தில் இராமநாதசாமி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு தனுஷ்கோடி, பாம்பன் பாலம், உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு செல்வது வழக்கம்.

மேலும் படிக்க | ஓசி பயணம்… வழக்கை வாபஸ் வாங்காவிட்டால் போராட்டம் – எச்சரிக்கும் வேலுமணி

இந்நிலையில், தனுஷ்கோடியின் அழகை ரசிக்க அரிச்சல்முனை பகுதியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். அலையின் சீற்றத்தைப் பொருட்படுத்தாமல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடலில் குளித்து விளையாடுகின்றனர்.

இங்கு அடிக்கடி அடையாளம் தெரியாத நிலையில் மனித உடல் அழுகிய நிலையில் கரை ஒதுங்கி வரும் நிலையில் . பல வருடங்களாக இப்பகுதியில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் காணாமல் போவதும் சில நாட்களுக்குப் பிறகு அடையாளம் தெரியாமல் கரை ஒதுங்குவதும் வழக்கமாக உள்ளது. மீனவர்களே நீந்த முடியாத ஆபத்தான கடல் பகுதியானது இந்த அரிச்சல்முனை கடல், குளிப்பதற்குத் தடைசெய்யப்பட்ட பகுதி என்று பல பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஆபத்தை உணராமல் தடையைமீறி குடும்பத்துடன் குளிக்கின்றனர்.

இதுவரையில் தடையை மீறி குளித்த ஏராளமானோர் கடலில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர். விடுமுறை நாட்களில் கூடுதல் காவல் துறையினர் அமர்த்தி தடையை மீறி குளிக்கும் சுற்றுலாப் பயணிகளை காவல்துறையினர் கண்காணித்து அவர்களை அப்புறப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளது.

மேலும் படிக்க | காந்தி ஜெயந்தி : 1.85 லட்ச மரக்கன்றுகளை நட்ட விவசாயிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link