சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் 2022-23 ம் கல்வி ஆண்டிற்கான பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியலை உயர்க்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். 

பொன்முடி வெளியிட்ட சில முக்கிய தகவல்கள்:

– 2022-23 ம் ஆண்டிற்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டை காட்டிலும் அனைத்து பிரிவிலும் விண்ணப்பித்தோர் இந்த ஆண்டு அதிகம். இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர மொத்தம் 2லட்சத்து 11 ஆயிரத்து  905  மாணவர்கள் விண்ணப்பித்தனர் . 

– கடந்த ஆண்டை காட்டிலும் 36 ஆயிரத்து 900 மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்.  விண்ணப்பித்தவர்களில் பதிவு கட்டணம்  1லட்சத்து 69ஆயிரத்து 80 மாணவர்கள் செலுத்தினர். 

– அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காட்டில் அரசு பள்ளி மாணவர்களில் 22,587 மாணவர்களுக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

– விளையாட்டு பிரிவில் 3102 விண்ணப்பம் பெறப்பட்டு,  1875 மாணவர்கள் சான்றிதழ் சரிபார்க்ப்ப்பட்டு, 1258 மாணவர்களுக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது.

– மாற்று திறனாளி 203 மாணவர்கள் , முன்னாள் ராணுவத்தினர் வாரிசு 970 மாணவர்களுக்கு தரவரிசை வெளியீடு. 

– தமிழ்நாட்டில் 431 பொறியியல் கல்லூரிகள் கலந்தாய்வில் பங்கேற்கின்றன. அவற்றில் 1லட்சத்து 48ஆயிரத்து 811 இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள்.

மேலும் படிக்க | சாத்தான்குளம் வழக்கு: சிபிஐ கூடுதல் குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்கள்

– ஒரே மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கான தரவரிசையில் அரசின் புதிய வழிகாட்டுதல்படி +2 மதிப்பெண்ணுடன், 10 ம் வகுப்பு மதிப்பெண்ணும் கணக்கில் கொள்ளப்பட்டதால் ஒரு மாணவருக்கு கூட இந்த ஆண்டு சமவாய்ப்பு எண்ணுக்கான ( Random number) தேவை ஏற்படவில்லை. 

– தரவரிசை பட்டியலில்  பெயர் விடுபட்ட மாணவர்கள் , இன்று முதல் 4 நாட்கள்  ( 19.8.22 வரை ) அருகில் உள்ள தமிழ்நாடு மாணாக்கர் பொறியியல் சேர்க்கை சேவை மையத்தை ( TFC’s) நாடலாம். மாணவர்கள் கூறும்  குறைகளில் நியாயம் இருப்பின் நிவர்த்தி செய்யப்படும்.

– 6 முதல் 12 ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்றாலும்  , 7.5 விழுக்காடு வேண்டி விண்ணப்பிக்கத் தவறிய  மாணவர்களும் 19.8.22 ம் தேதி வரை  தமிழ்நாடு மாணாக்கர் பொறியியல் சேர்க்கை சேவை மையம் சென்று தங்களை அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் தங்களை இணைத்து கொள்ளலாம்.  இந்த மாணவர்களுக்கு அவர்கள் பெறும் இடத்தில் A B C … என்ற வரிசையில் தர வரிசையில் இணைத்து கொள்ளப்படுவர். உதாரணத்திற்கு 7.5 ஒதுக்கீட்டில் 50 வது இடம் பெறும் மாணவர் தாமதமாக 4 நாளுக்குள் தன்னை இணைத்து கொண்டால் அவருக்கு 50 A …50B என வழங்கப்படும் , இதன் மூலம் 50 வது இடத்தில் தற்போது உள்ள நபருக்கு அடுத்ததாகவும் 51 வது இடத்தில் உள்ளவருக்கு முன்பாகவும் நேர்முகத் தேர்வில் இந்த மாணவர் கலந்து கொள்ள முடியும்). 

– தொழில்நுட்ப கல்வி இயக்க அழைப்பு மையத்தின் எண்ணான 18004250110 -ல் மாணவர்கள் தங்களது கேள்விகளை கேட்டு தெளிவுபெறலாம். 

– முதல் மதிப்பெண்  ரஞ்சிதா , snsm higher sec school கேரளாவின் கொல்லம் . தமிழ்நாட்டு மாணவி. கேரளாவில் பயின்று இங்கு விண்ணப்பித்துள்ளார். ( ஒரு மாணவர்  இந்தியாவில் எங்கு பயின்றாலும்  தமிழ்நாட்டு இருப்பிடச் சான்று வழங்கினால் தமிழ்நாட்டில் பொதுப்பிரிவு பட்டியலில் இடம் பெற்று உயர் கல்வியில் அவர் சேரலாம்)

– 2ம் இடம் ஹரினிகா அவ்வை பள்ளி ,  ஜடையாம்பட்டி , தருமபுரி

– 3 ம் இடம் லோகேஷ் கண்ணன் , வேலம்மாள் மெட்ரிக்பள்ளி .  திருவள்ளூர்

– முதல் 10 இடம் பெற்ற  நபர்களும் 200க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். 

மேலும், முதல்வர் அறிவித்தபடி பொறியியல் மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் விரைவில் வெளியாக உள்ளது” என்று பொன்முடி கூறினார்.

மேலும் படிக்க | பாரத் ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினம்; பிரதமர், குடியரசுத் தலைவர் அஞ்சலி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link