தமிழக மாவட்டங்களுக்கான வானிலை தகவலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. நேற்று அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த  காற்றழுத்த தாழ்வு  பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று காலை அக்டோபர் 22ஆம் தேதி 0830 மணி அளவில் தென்கிழக்கு  மற்றும்  அதனை ஒட்டிய மத்திய கிழக்கு  வங்கக்கடல் பகுதியில், போர்ட் பிளேர்க்கு, மேற்கு- வடமேற்கு திசையில் 110 கிலோ மீட்டர் தொலைவிலும், சாகர் தீவுக்கு தெற்கு- தென்கிழக்கு திசையில் 1460 கிலோ மீட்டர் தொலைவிலும்  நிலை கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியகிழக்கு மற்றும்  அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அக்டோபர் 23ஆம்  தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக  வலுப்பெறும். 

பின்னர் வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதியில் அக்டோபர் 24ஆம்  தேதி காலை புயலாக வலுபெறக்கூடும். அதன் பின்னர் வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து அக்டோபர் 25ஆம் தேதி அதிகாலை வங்கதேச கடற்கரையில் டிங்கோனா தீவு மற்றும் சந்திவிப் இடையில் கரையை கடக்கும். 

22.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

23.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்

.24.10.2022 மற்றும் 25.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். 

26.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். 

சென்னைக்கான வானிலை முன்னறிவிப்பு:

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய  மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய  லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மேலும் படிக்க | தீபாவளிக்கு மறுநாள் பள்ளிகள் விடுமுறையா? அமைச்சர் சொல்வது என்ன 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): 

உசிலம்பட்டி (மதுரை), சாத்தூர் (விருதுநகர்), சத்தியமங்கலம் (ஈரோடு) தலா 6, குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி), விரகனூர் அணை (மதுரை) தலா 4, வேப்பூர் (கடலூர்), அருப்புக்கோட்டை (விருதுநகர்), வைப்பார் (தூத்துக்குடி), திருச்செங்கோடு (நாமக்கல்), மதுரை விமான நிலையம் (மதுரை), கோவிலங்குளம் (விருதுநகர்), ஆண்டிபட்டி (மதுரை), கீழச்செருவை (கடலூர்), மேமாத்தூர் (கடலூர்) தலா 3, பாரூர் (கிருஷ்ணகிரி), கயத்தாறு (தூத்துக்குடி), செட்டிகுளம் (பெரம்பலூர்), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), கோத்தகிரி (நீலகிரி), செய்யார் (திருவண்ணாமலை), சோலையார் (கோயம்புத்தூர்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), பெரம்பலூர், தென்பரநாடு (திருச்சி), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி), ஓமலூர் (சேலம்), மேட்டூர் (சேலம்), பெரியகுளம் (தேனி), ஓசூர் (கிருஷ்ணகிரி), கெட்டி (நீலகிரி), உதகமண்டலம் (நீலகிரி) தலா 2, மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), ஆம்பூர் (திருப்பத்தூர்), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), பொன்னேரி (திருவள்ளூர்), குன்னூர் (நீலகிரி), கமுதி (இராமநாதபுரம்), விருதுநகர் AWS (விருதுநகர்), பிலவாக்கல் (விருதுநகர்), தாளவாடி (ஈரோடு), சோழவந்தான் (மதுரை), மாயனூர் (கரூர்), பல்லடம் (திருப்பூர்), குமாரபாளையம் (நாமக்கல்), கடம்பூர் (தூத்துக்குடி), இரணியல் (கன்னியாகுமரி), பவானி (ஈரோடு), பவானிசாகர் (ஈரோடு), குன்னூர் PTO  (நீலகிரி), மேட்டுப்பட்டி (மதுரை), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), ஆயிக்குடி (தென்காசி), ஹாரூர் (தருமபுரி), அரவக்குறிச்சி (கரூர்), பரங்கிப்பேட்டை (கடலூர்), சேரன்மகாதேவி (திருநெல்வேலி), வாடிப்பட்டி (மதுரை), சூலூர் (கோயம்புத்தூர்), திருவண்ணாமலை (திருவண்ணாமலை), கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி), குந்தா பாலம் (நீலகிரி), அஞ்சட்டி (கிருஷ்ணகிரி), பூதபாண்டி (கன்னியாகுமரி), காரியாபட்டி (விருதுநகர்), பெரம்பூர் (சென்னை), தல்லாகுளம் (மதுரை), தளி (கிருஷ்ணகிரி), மரக்காணம் (விழுப்புரம்), தத்தியேங்கர்பேட்டை திருச்சி, மோகனூர் (நாமக்கல்), கடலாடி (ராமநாதபுரம்), ஆரணி (திருவண்ணாமலை), ஓட்டன்சத்திரம் (திண்டுக்கல்), கொட்டாரம் (கன்னியாகுமரி), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி),  லப்பைக்குடிகாடு (பெரம்பலூர்), பெரியார் (தேனி), செங்கம் (திருவண்ணாமலை), செங்கோட்டை (தென்காசி), கன்னியாகுமரி, கடலூர், தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), திருமானூர் (அரியலூர்), தக்கலை (கன்னியாகுமரி), முதுகுளத்தூர் (ராமநாதபுரம்), திருவாலங்காடு (திருவள்ளூர்), நிலக்கோட்டை (திண்டுக்கல்), அரியலூர் (அரியலூர்), திருப்போரூர் (செங்கல்பட்டு), கிருஷ்ணராயபுரம் (கரூர்), பெரியகுளம் PTO (தேனி), மணியாச்சி (தூத்துக்குடி), சூளகிரி (கிருஷ்ணகிரி), விளாத்திகுளம் (தூத்துக்குடி), நாகர்கோவில் (கன்னியாகுமரி), காங்கேயம் (திருப்பூர்), பாப்பாரப்பட்டி Agro (தருமபுரி), வில்லிவாக்கம் ARG  (திருவள்ளூர்) தலா  1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக  கடலோரப்பகுதிகளில் மீனவர்களுக்கான எச்சரிக்கை  ஏதுமில்லை.

சமீபத்திய வானிலை தகவல் பற்றி மேலும் தெரிந்துகொள்ள mausam.imd.gov.in/chennai   இணையதளத்தை காணவும். 

மேலும் படிக்க | கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தவர்கள் பலி – ஸ்ரீபெரும்புதூரில் சோகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link