தமிழக மாவட்டங்களுக்கான வானிலை தகவலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. நேற்று அந்தமான்  மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்  நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்று காலை அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில்  காற்றழுத்த தாழ்வு  பகுதியாக வலுவடைத்துள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு மற்றும் ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அக்டோபர் 22 ஆம்  தேதிவாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அக்டோபர் 23 ஆம்  தேதிவாக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.  பிறகு வடதிசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதனை  ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக 24 ஆம் தேதி வாக்கில் வலுபெறக்கூடும். பிறகு 25 ஆம்  தேதிவாக்கில் மேற்கு வங்காளம் மற்றும் வங்கதேச கடற்கரை நோக்கி நகரக்கூடும்.

20.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி,  இராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

21.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர், தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர்,  சேலம், நாமக்கல், கரூர், திருப்பூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

22.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி,  காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

23.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். 

24.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். 

சென்னைக்கான வானிலை முன்னறிவிப்பு:

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய  மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய  மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மேலும் படிக்க | குடித்தவர்களுடன் பயணித்தாலும் அபராதம்… போக்குவரத்து விதிகளில் பல மாற்றங்கள் – புது ரூல்ஸ் 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): 
தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), ராமேஸ்வரம் (ராமநாதபுரம்) தலா 10, திருச்சி டவுன் (திருச்சி), திருச்சி சந்திப்பு (திருச்சி) தலா 9, வாணியம்பாடி AWS (திருப்பத்தூர்) 8, சேலம் (சேலம்), தஞ்சாவூர் (தஞ்சாவூர்), கொடுமுடி (ஈரோடு), ஓசூர் (கிருஷ்ணகிரி), நத்தம் (திண்டுக்கல்), வால்பாறை பிடோ (கோவை), கடலாடி (ராமநாதபுரம்), ஓசூர் AWS (கிருஷ்ணகிரி) தலா  7, தாம்பரம் (செங்கல்பட்டு), பாம்பன் (ராமநாதபுரம்), பொன்மலை (திருச்சி) தலா 6, செந்துறை (அரியலூர்), நாமக்கல் (நாமக்கல்), திருப்புவனம் (சிவகங்கை), தளி (கிருஷ்ணகிரி), சமயபுரம் (திருச்சி) தலா 5, சேந்தமங்கலம் (நாமக்கல்), வாலினோகம் (ராமநாதபுரம்), ராசிபுரம் (நாமக்கல்), மாயனூர் (கரூர்), மாரண்டஹள்ளி (தருமபுரி), பவானி (ஈரோடு), அகரம் சீகூர் (பெரம்பலூர்), வல்லம் (தஞ்சாவூர்), சென்னை விமான நிலையம் (சென்னை), விமான நிலையம் மதுரை (மதுரை), புதுச்சத்திரம் (நாமக்கல்) தலா 4, ராமநாதபுரம் (ராமநாதபுரம்), துறையூர் (திருச்சி), ஆண்டிபட்டி (தேனி), ஊத்துக்குளி (திருப்பூர்), க.பரமத்தி (கரூர்), குமாரபாளையம் (நாமக்கல்), மணப்பாறை (திருச்சி), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), எம்ஜிஆர் நகர் (சென்னை), வட்ராப் (விருதுநகர்), செம்பரபாக்கம் (திருவள்ளூர்), புதுக்கோட்டை (புதுக்கோட்டை), தஞ்சை பாபநாசம் (தஞ்சாவூர்), அருப்புக்கோட்டை (விருதுநகர்), செம்பரம்பாக்கம் ஆர்க் (திருப்பூர்), திருவள்ளூர்  தஞ்சாவூர்), முத்துப்பேட்டை(திருவாரூர்), வாடிப்பட்டி (மதுரை), சோளிங்கநல்லூர் (சென்னை), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), அரிமளம் (புதுக்கோட்டை), காட்பாடி (வேலூர்), அஞ்சட்டி (கிருஷ்ணகிரி), காரைக்குடி (சிவகங்கை), திருமங்கலம் (மதுரை) தலா 3, தாளவாடி (ஈரோடு), கிருஷ்ணராயபுரம் (கரூர்), சோலையார் (கோயம்புத்தூர்), ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி), கோவிலங்குளம் (விருதுநகர்), முதுகுளத்தூர் (இராமநாதபுரம்), ஆலங்குடி (புதுச்சேரி),  புதுச்சேரி), சின்னக்களர் (கோவை), மேட்டூர் (சேலம்), அரவக்குறிச்சி (கரூர்), மதுக்கூர் (தஞ்சாவூர்), பரமத்திவேலூர் (நாமக்கல்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை), மூலனூர் (திருப்பூர்), திருப்பத்தூர்(சிவகங்கை), லால்குடி (திருச்சி), சூளகிரி (கிருஷ்ணகிரி), ஜெயம்கொண்டம் (அரியலூர்), கடவூர் (கரூர்) தலா 2, திருவாடானை (ராமநாதபுரம்), ஓமலூர் (சேலம்), கே பாலம் (நீலகிரி), கொரட்டூர் (திருவள்ளூர்), பெருங்களூர் (புதுக்கோட்டை), எமரலாடு (நீலகிரி), ஈரோடு (ஈரோடு), பொன்னை அணை (வேலூர்), கீழ் கோதையார் ARG (கன்னியாகுமரி), பெரம்பூர் (சென்னை), மோகனூர் (நாமக்கல்), எடப்பாடி (சேலம்), வைப்பார் (தூத்துக்குடி), அம்பத்தூர் (திருவள்ளூர்), டிஜிபி அலுவலகம் (சென்னை), குன்னூர் (நீலகிரி), மண்டபம் (ராமநாதபுரம்), தண்டராம்பேட்டை(திருவண்ணாமலை), வேலூர் (வேலூர்), குழித்துறை (கன்னியாகுமரி), உதகமண்டலம் (நீலகிரி), பல்லடம் (திருப்பூர்), கோத்தகிரி (நீலகிரி), மருங்காபுரி (திருச்சி), பாலவிதிதி (கரூர்), கெட்டி (நீலகிரி), குன்னூர் (நீலகிரி), செய்யூர் (செங்கல்பட்டு), கடல்குடி (தூத்துக்குடி), நன்னிலம் (திருவாரூர்), மஞ்சளாறு (தஞ்சாவூர்), காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்), அவலாஞ்சி (நீலகிரி),), தாராபுரம் (திருப்பூர்), காரியாபட்டி(விருதுநகர்), பூந்தமல்லி (திருவள்ளூர்), செங்கம் (திருவண்ணாமலை), தம்மம்பட்டி (சேலம்), அம்முண்டி (வேலூர்), கொடவாசல் (திருவாரூர்), கோவில்பட்டி (திருச்சி), சங்கரிதுர்க் (சேலம்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), திருவாலங்காடு (திருவள்ளூர்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), கரூர் (கரூர்), தேவாலா (நீலகிரி), தத்தியெங்கர்பேட்டை (திருச்சி), காங்கேயம் (திருப்பூர்) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

20.10.2022: முதல் 24.10.2022 வரை: குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகூடா, லட்சத்தீவு மாலத்தீவு பகுதிகளில்  சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

20.10.2022: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்
 
கேரள கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

21.10.2022: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

22.10.2022: மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

23.10.2022: மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 50 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

24.10.2022: மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயல் காற்று  மணிக்கு 60 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் .

25.10.2022: மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயல் காற்று  மணிக்கு 70 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சமீபத்திய வானிலை தகவல் பற்றி மேலும் தெரிந்துகொள்ள mausam.imd.gov.in/chennai   இணையதளத்தை காணவும். 

மேலும் படிக்க | வைகை ஆற்றில் தரைப் பாலத்தில் போதையில் கிடந்த ஆசாமியால் பரபரப்பு! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link