தமிழக மாவட்டங்களுக்கான வானிலை தகவலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, பின்வரும் வானிலை மாற்றங்கள் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 24.09.2022,  25.09.2022 மற்றும் 26.09.2022 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான பெய்யக்கூடும்.

27.09.2022 மற்றும் 28.09.2022 ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான பெய்யக்கூடும் பெய்யக்கூடும்.

சென்னைக்கான வானிலை அறிக்கை:

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37  டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37  டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மேலும் படிக்க | பள்ளிகளுக்காக நிதி ஒதுக்குவாரா முதலமைச்சர்? ஆர் பி உதயகுமார் கேள்வி 

TN Weather Forecast

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு : மழை  ஏதுமில்லை.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 

தென் தமிழககடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர்   வேகத்தில் வீசக்கூடும்.

 மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சமீபத்திய வானிலை தகவல் பற்றி மேலும் தெரிந்துகொள்ள mausam.imd.gov.in/chennai   இணையதளத்தை காணவும். 

பா. செந்தாமரை கண்ணன்
இயக்குனர்
தென் மண்டல தலைவருக்காக,
மண்டல வானிலை ஆய்வு மையம், சென்னை.

மேலும் படிக்க | தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் வளர்ச்சி அதிகரிக்கும்: ஜே.பி நட்டா 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Source link