சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகின்ற காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகிலுள்ள செம்பரம்பாக்கம் ஏரி ஆண்டுதோறும் பெய்யும் பருவ மழையால் நிரம்பி விடும். இதனால் ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளுக்கு அவ்வாறு செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து  திறந்துவிடப்பட்ட நீரால்  சென்னையில் அதிக அளவு வெள்ளம் ஏற்பட்டு சென்னை மற்றும் சென்னை புறநகரில் பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாகவே ஒவ்வொரு பருவமழை மற்றும் புயலால் ஏற்படும் மழையின் போது செம்பரம்பாக்கம் ஏரியின் நிலவரம் குறித்து தொடர்ந்து பொதுப்பணித்துறை  அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்பொழுது வடகிழக்கு பருவ மழையை யொட்டி தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியிற்கு தொடர் நீர் வரத்து அதிகரித்துள்ள  காரணத்தால்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதியம் 3மணியளவில் 100கன அடி நீர் திறக்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர்த்தி அறிவித்துள்ளார். 

மேலும் படிக்க | சென்னையில் மழைநீர் தேங்கவில்லை – அமைச்சர் சேகர்பாபு

இன்று காலை ஆறு மணி நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்தானது 1180 கனடியாகவும், ஏரியின் முழு கொள்ளளவான 24 அடியில் 20. 64அடி கொள்ளளவை நீர் எட்டியுள்ளது. மேலும் செம்பரம்பாக்கம் எரியில் 3.645 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்க முடியும். தற்போதைய நிலவரப்படி சுமார 2.764 டிஎம்சி நீர் செம்பரம்பாக்கம் ஏரியில் உள்ளது.

மேலும் படிக்க | வெளுத்து வாங்கும் கனமழை: எந்ததெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் லீவு?

மேலும் செம்பரம்பாக்கம் பகுதியில் மட்டும் கடந்த 24மணி நேரத்தில் சுமார்  9 செ.மீட்டர் அளவு கன மழையானது கொட்டித்தீர்த்துள்ள நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியினை பொதுப்பணித் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும். நீர் செல்லும் பாதையை யொட்டி உள்ள கரையோர கிராம மக்களும் பாதுகாப்பாக இருக்கும் படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், கனமழை காரணமாக 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கனமழை எதிரொலியாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். சென்னையில் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, கனமழை எதிரொலியாக ராணிப்பேட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | வடகிழக்கு பருவமழை தொடர் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link