கோயம்புத்தூர்: கோவை அரசு மருத்துவமனை எதிரே இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் 108 ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டதாக போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோவை அரசு மருத்துவமனை எதிரே பேருந்து நிறுத்தம் உள்ளது. கோவை அரசு மருத்துவமனைக்குள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் ஆம்புலன்ஸ் நிறுத்த தற்போது போதிய இடம் இல்லை. இதனால் ஆம்புலன்ஸ்கள் பேருந்து நிறுத்தம் அருகே நிறுத்தப்படுகிறது.

மேலும் படிக்க: ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் அராஜகத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்: விருத்தாசலத்தில் பரபரப்பு

இந்த நிலையில் நேற்று வழக்கம் போல 108 ஆம்புலன்ஸ் ஊழியர் ஆம்புலன்ஸை பேருந்து நிறுத்தம் அருகே நிறுத்தினார். அப்போது அங்கு வந்த போக்குவரத்து காவலர் 108 ஆம்புலன்ஸ் மீது 500 ரூபாய் அபராதம் விதித்தார். 

Coimbatore Government Hospital

மேலும் படிக்க: மாணவியின் குடும்பத்திற்கு முதல்வர் நேரில் ஆறுதல்! பிரியாவின் மரணம் தாங்க முடியாத துயரம் என ட்வீட்

இதைத்தொடர்ந்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 108 ஆம்புலன்ஸ் எங்கு நிறுத்துவது என்று நிர்வாகத்திற்கு கேட்டனர். அதைத்தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனைக்குள் தற்காலிகமாக நிறுத்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. 

ஆனால் இது 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு நோயாளிகளை கொண்டு செல்ல அசவுகரியமாக உள்ளது எனவும், ஆகவே 108 ஆம்புலன்ஸ் நிறுத்த உடனடியாக வசதி செய்து கொடுக்க வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை வைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: 50 ஆண்டுக்கு முன் போட்ட விதை..! இந்தியாவின் “குட்டி ஜப்பானாக ஓசூர்” மாறிய வரலாறு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Source link