தென்னிந்திய திருச்சபைகளின் பவள விழா சென்னை வானகரத்தில் உள்ள இயேசு அழைக்கிறார் அரங்கத்தில் நடைப்பெற்றது இதில்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்,மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோர்  பங்கேற்றனர், 75வது பவள விழாவை முன்னிட்டு தமிழக முதல்வர் மேடையில் கிருத்துவர்களுடன் கேக் வெட்டி பயனாளிகளுக்கு, காது கேட்கும் இயந்திரம், தையல் மிஷின், உள்ளிட்ட நல உதவிகளை வழங்கினார், இந்த நிகழ்வில் 5000க்கும் மேற்ப்பட்டோர் கலந்துக்கொண்டனர்..

நான் இல்லாமல் நீங்கள் இல்லை நீங்கள் இல்லாமல் நான் இல்லை என்பதன் அடையாளமாக இந்த நிகழ்வு உள்ளது. தென்னிந்திய திருச்சபையின் பவளவிழா தொடக்க விழாவில் கடந்த ஆண்டு நான் பேசினேன். இன்று நிறைவு விழாவில் கலந்து கொண்டுள்ளேன். பல்வேறு மாநிலங்களில் மட்டும் இல்லாமல் இலங்கையிலும் தென்னிந்திய திருச்சபை செயல்படுகிறது.
40 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். இதற்கு காரணம் ஒற்றுமை உணர்வுதான் என  முதல்வர் முக ஸ்டாலின் குறிப்பிட்டார்.

ஒற்றுமை உணர்வு தான் நம்மை எப்போதும் என்றும் காப்பாற்றும். என்ற அவர் “எல்லோரும் ஒன்றாய் இருப்பார்களாக” என்ற பைபிள் வாசகங்களை பேசினார். ஒற்றுமை எண்ணத்தோடு எல்லோரும் இருக்குமானால் நாடு அமைதி பூமியாக திகழும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகமில்லை , இந்தியா பல்வேறு மதத்தினர் வாழும் நாடாக இருந்தாலும் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறோம் ஒற்றுமையாக வாழ்கிறோம். அவரவர் மத நம்பிக்கை அவரவர்களுக்கு சொந்தமானது இது அடுத்தவர்களுக்கு எதிராக இருக்காது. இயேசு கிறிஸ்துவின் போதனையில் அன்பு தான் மூலதனமாக இருந்தது.

மேலும் படிக்க | காதலி பேசாத அதிர்ச்சியில் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்: சோகத்தில் குடும்பம்

எல்லா மனிதர்களும் சமம் என்பது தான் சமத்துவம் யாரையும் வேற்றுமையாக பார்க்காதது என்பதுதான் சகோதரத்துவம் அனைவருடனும் சேர்ந்து வாழ் என்பதுதான் ஒற்றுமை ஏழைகள் மீது கருணை காட்டு என்பதுதான் இரக்கம் அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பதுதான் நீதி மற்றவர்களுக்காக வாதாடுவது தான் தியாகம் என மேற்கோள் காட்டி பேசினார்.

பசித்த வயிறுக்கு உணவாக தவித்த வாய்க்கு தண்ணீர் ஆக திக்கற்றவர்களுக்கு திசையாக யாரும் மற்றவர்களுக்கு ஆதரவாக நமது அரசு செயல்பட்டு வருகிறது. அரசிற்கு அன்பும் ,உரிமையும் இரண்டு கண்கள் என்றார். ஒரு கை உழைக்கவும் இன்னொரு கை உணவு ஊட்டுமான அரசாக செயல்பட்டு வருகிறோம் இயேசுவினுடைய  சொற்பொழிவில் உள்ள வாக்கியங்களை இந்த நேரத்தில் சொல்வது பொருத்தமானதாக இருக்கும். நாம் எப்போதும் ஒன்றிணைந்து நம்முடைய ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக ஜாதி மதம் கடந்து பயணிக்க  வேண்டும் என்றார்.

மேலும் படிக்க | தமிழகத்தை அமளிக் காடாக்கும் பாஜகவின் சதித்திட்டம்: ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு

மேலும் படிக்க | ‘நான் கத்தினேன், அவன் இளித்தான்’ – இரவில் சென்னை மாணவிக்கு நேர்ந்த கொடுமை – ஆட்டோ ஓட்டுநர் கைது

மேலும் படிக்க | Rajiv Gandhi assassination case : நளினி, ரவிச்சந்திரன் மனுக்கள் மீது மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link