தமிழ்நாட்டில் இந்த ஆண்டுக்கான 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மே மாதம் தொடங்கியது. இந்தத் தேர்வு 3,119 மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வை,  8,83,882 பேர் எழுதினர். அதனைத் தொடர்ந்து ப்ளஸ் 1 தேர்வு முடிவுகளானது ஜூன் 27ஆம் தேதி வெளியானது. அதில், தேர்வு எழுதியவர்களில் 7,59,856 பேர் தேர்ச்சி பெற்றனர். குறிப்பாக மாணவிகள் 94.99 சதவீதம் பேரும், மாணவர்கள் 84.86 சதவீதம் பேரும் தேர்ச்சியடைந்தனர்.

மேலும் படிக்க | உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை – சென்னையில் சோகம்

இந்தச் சூழலில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்கு துணை தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வானது ஆகஸ்ட் இரண்டாம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி முடிவடைந்தது.

மேலும் படிக்க | நாடு முழுவதும் நடைபயணம் செய்து காந்திய கொள்கையை பரப்பி வரும் கருப்பையா

இந்நிலையில் 11ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கான முடிவுகள் நாளை வெளியாக இருக்கிறது. மாணவ, மாணவிகள் நாளை பிற்பகல் 3 மணியிலிருந்து தங்களது ரிசல்ட்டை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்  தெரிந்துகொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | தூத்துக்குடியில் அடுத்தடுத்து 23 சிறார்கள் – வெளியான அதிர்ச்சி பின்னணி !!

மேலும் படிக்க | காவல்துறையினர் கால்களை பிடித்துக்கொண்டு கதறி அழுத சகோதரிகள்: சேலத்தில் பரபரப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link