கிராமத்து திருவிழாக்களில் எப்போதும் தனித்துவமாக இருப்பது ஆடல், பாடல் நிகழ்ச்சிதான். ஒருகாலத்தில் கலையின் வடிவமாக பார்க்கப்பட்ட அந்த நிகழ்ச்சி காலப்போக்கில் ஆபாசத்தின் வடிவமாக மாற்றப்பட்டது. இதனால் பலரும் அந்த நிகழ்ச்சியை பார்த்து முகம் சுளிக்க ஆரம்பித்தனர். எனவே ஆடல் பாடலில் ஆபாசத்தை அறவே ஒழித்து அந்த நடன கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டுமென பலர் கூறிவந்தனர். அதுமட்டுமின்றி ஆடல் பாடலில் ஆபாசம் அதிகம் இருப்பதால் பல இடங்களில் அந்த நிகழ்ச்சி நடத்த அனுமதியும் மறுக்கப்பட்டதும். இதனால் அந்தக் கலைஞர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டது. 

இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரிச்சாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “ மதுரை மாவட்டம் மேலப்பட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோயில் திருவிழா நடந்து வருகிறது. இந்தத் திருவிழாவில் வருகிற 8ஆம் தேதி இரவு கரகாட்ட நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்து உரிய அனுமதி கோரி காவல் துறையிடம் மனு சமர்ப்பித்துள்ளோம். எனவே கரகாட்டம் நடத்த அனுமதியும், நிகழ்ச்சிக்கு போதிய போலீஸ் பாதுகாப்பும் வழங்க உத்தரவிட வேண்டும்” என கோரப்பட்டிருந்தது.

Highcourt Madurai Branch

இந்த மனு நீதிபதி சத்திகுமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, கரகாட்டம் நடத்துவதற்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார். அவர் பிறப்பித்த உத்தரவில், கரகாட்ட நிகழ்ச்சியில் ஆபாச நடனம் ஆடக்கக்கூடாது. நாகரிகமான உடைகளை அணிய வேண்டும். நிகழ்ச்சியில் இரட்டை அர்த்த பாடல்கள் இடம் பெறக்கூடாது. எந்த ஒரு அரசியல் கட்சி, மதம், சமூகம் அல்லது சாதியை குறிப்பிடும் விதத்தில் பாடல்களோ அல்லது நடனமோ இருக்கக்கூடாது. 

சாதி அடிப்படையில் எந்த பாகுபாடும் இருக்கக்கூடாது. நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் குட்கா பொருட்களையோ, மதுபானத்தையோ உட்கொள்ளக் கூடாது. நிகழ்ச்சி இரவு 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும்” என நிபந்தனைகளை விதித்து அனுமதியளித்தார்.

மேலும் படிக்க | முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக அமைச்சரின் ஆதரவாளர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEata

Source link