சென்னை: தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள், ஆனால் கட்டுப்பாடு அவசியம் என தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மருத்துவமனைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகே பட்டாசு வெடிக்கக் கூடாது என தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை பொதுமக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் செய்திக் குறிப்பில் விளக்கமாக அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஒலி மாசு மற்றும் காற்று மாசை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | கன்னியில் உருவாகும் திரிகிரஹி யோகத்தினால் ‘இந்த’ ராசிகளுக்கு அமோக பலன்கள்!

பட்டாசு வெடிக்கும் நேரம் 
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்றும், கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.  

பட்டாசுகள்
உச்சநீதிமன்ற ஆணையின்படி, மாவட்ட அளவில்  நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்துகிறது. பாதிப்பு இல்லாமல் சுற்றுச்சூழலை பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும். இதனை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.

தீபாவளி பட்டாசு வெடிக்கும்போது தவிர்க்க வேண்டியவை
1. அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
2. மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
3. குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் படிக்க | இந்திய கடற்படை துப்பாக்கிச்சூட்டில் மீனவர் காயம் – நிவாரணம் அறிவித்த முதல்வர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link