தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 10 விழுக்காடு வரை போனஸ் மற்றும் கருணை தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

வரும் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி திருநாளையொட்டி தமிழ்நாடு அரசின் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம்.

Diwali Bonus

மேலும் படிக்க  | 7th Pay Commission: தீபாவளி போனஸ், டிஏ ஹைக், ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்

தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான அரசு போக்குவரத்து கழகங்கள், மின்சார வாரியம், ஆவின், டாஸ்மாக், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு பஞ்சாலைகள் போன்ற பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படுவது வழக்கமாகும். 

Diwali Bonus

முந்தயை திமுக ஆட்சிக்காலத்தில், அரசு ஊழியர்களுக்கு என்று பல்வேறு சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.  குறிப்பாக, அதிமுக காலங்களில் டெஸ்மா, எஸ்மா சட்டங்களின்கீழ் அரசு ஊழியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்ட நிலையில், அத்தனை வழக்குகளையும், திமுக அரசு 2006ஆம் ஆண்டில் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | PAN Card தொலைந்துவிட்டதா? புதிய பான் கார்டை பெறுவது எப்படி? முழு செயல்முறை இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link