10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அட்டவணையை இன்று வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் 10, 12ஆம் வகுப்புகளுக்கான கால அட்டவணையை 2023ஆம் ஆண்டுக்கான அதிகாரப்பூர்வ இணையதளமான dge.tn.gov.in இல் வெளியிட்டுள்ளார். 

இந்த நிலையில் தமிழ்நாடு எஸ்எஸ்எல்சி, எச்எஸ்சி தேர்வு 2023 மார்ச் 2023 இல் நடத்த உள்ளது. அதன்படி 2022 – 2023 கல்வியாண்டிற்கான 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதிகள் மற்றும் கால அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் 10 ஆம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 6 2023, தொடங்கி 20 ஏப்ரல் 2023, வரை நடைப்பெறும். அதேசமயம், 11 ஆம் வகுப்பு தேர்வுகள் 14 மார்ச் 2023, தொடங்கி 05 ஏப்ரல் வரை நடைபெறும், மேலும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் 13 மார்ச் 2023, தொடங்கி 03 ஏப்ரல் 2023 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | JEE 2023: ஜேஇஇ மெயின் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு! முக்கியத் தகவல்

முன்னதாக கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 – 2020, 2020- 2021ஆம் கல்வி ஆண்டுகளில் பள்ளிகள் மூடப்பட்டு பொதுத்தேர்வுகள் சரிவர நடத்தப்படவில்லை. பத்தாம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களிலும் மதிப்பெண்கள் தெரிவிக்கப்படாமல் பாஸ் என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.

இதற்கிடையில் கொரோனா தொற்று குறைந்ததையடுத்து தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் நடைபெற்றன. திருப்புதல் தேர்வுகளும் நடத்தப்பட்டு பின்னர் 2022ஆம் ஆண்டுக்கான 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் முதல் பொதுத்தேர்வுகள் நடைபெற்றன. ஜூன் மாதத்தில் ரிசல்ட் அறிவிக்கப்பட்டது. பின்னர் 2022-2023 ஆண்டுக்கான வகுப்புகள் கடந்த ஜூலை மாதம் தொடங்கியது.

இந்த நிலையில் இன்று 2022-2023 ஆண்டுக்கான 10,11,12 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டார். அதன் முழு விவரம் இதோ:

10 ஆம் வகுப்பு: 

11 ஆம் வகுப்பு: 

12 ஆம் வகுப்பு:

மேலும் படிக்க | கம்மி விலையில் LPG சிலிண்டரை வாங்கணுமா? அப்போ இதை பண்ணுங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link