கோவையில் சில நாள்களுக்கு முன்பு காரில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்தானது. இதில் ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து அந்த காரில் வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது இதுதொடர்பான விசாரணையை என்.ஐ.ஏ செய்துவருகிறது. ஆனால் இந்த சம்பவம் நடந்ததில் இருந்தேன் இதற்கும் தீவிரவாத அமைப்புக்கும் தொடர்பிருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து கூறிவந்தார்.

இந்தச் சூழலில் தவறான செய்திகளை பரப்ப வேண்டாமென்று தமிழக காவல் துறை அண்ணாமலைக்கு கோரிக்கை வைத்திருந்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக காவல்துறை இன்று வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்ட ஒவ்வொன்றுக்கும் தகுந்த பதில் விரைவில் வழங்கப்படும். 

காவல்துறையில் பணிபுரியும் சகோதர சகோதரிகள் மீது எங்களுக்கு பெருமதிப்பும் மரியாதையும் உள்ளது. ஆனால் காவல்துறை டிஜிபி மற்றும் உளவுத்துறை ஏடிஜிபி  காவல்துறையினராக இல்லாமல் திமுகவினரை போல் செயல்படுகிறார்கள். 

காவல்துறை உயர் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படாமல் ஆளும் திமுக அரசை மகிழ்விக்க மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் இதுவரை நாங்கள் முன் வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளும் இரண்டு உயர் அதிகாரிகளுக்கு எதிராக மட்டுமே.

ஆனால் அவர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள காவல்துறையிலிருந்து பொதுவான ஒரு பத்திரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க |’பொய் செய்திகளை பரப்பாதீர்’ அண்ணாமலைக்கு தமிழக காவல்துறை வேண்டுகோள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link