சென்னை மதுரவாயலில் கடந்த மாதம் 1ஆம் தேதி நடைபெற்ற ஒரு கூட்டத்தில், இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளரும், ஸ்டண்ட் மாஸ்டருமான கனல்கண்ணன் பங்கேற்றார். அப்போது பெரியார் குறித்து கனல் கண்ணன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக திராவிடர் கழகம் அளித்த புகாரின் பேரில் சென்னை சைபர் கிரைம் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த கனல் கண்ணன் கடந்த மாதம் 15ஆம் தேதி பாண்டிச்சேரியில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று சென்னை உயர்நீதிமன்றம் கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. 

இதனையடுத்து இன்று மாலை புழல் சிறையில் இருந்து இந்து முன்னணி பிரமுகரும் ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.  இந்து முன்னணி நிர்வாகிகள் மாலை அணிவித்து கனல் கண்ணனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனல் கண்ணன் இந்துக்களுக்காக சிறை சென்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இந்துக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன், போராடுவேன் என உறுதியாக தெரிவித்தார். மேலும் அரசியல் சார்பான பிற கேள்விகளுக்கு பதில் அளிக்க கனல் கண்ணன் மறுத்துவிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்து முன்னணி மாநில செய்தி தொடர்பாளர் இளங்கோவன் சுதந்திர தினத்தன்று கருத்துருமையை முடக்கும் வகையில் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதாக குற்றம் சாட்டினார். 

மேலும் படிக்க | ஆளுநர் ரவிக்கு மூத்த வழக்கறிஞர் துரைசாமி அனுப்பிய மனுவால் பரபரப்பு!

கடந்த ஒன்றரை ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியில் கருத்துரிமை நசுக்கப்பட்டு வருவதாக சாடினார். இந்துக்களுக்கு எதிராக பேசுபவர்கள் சுதந்திரமாக நடமாடுவதாக குற்றம் சாட்டிய இளங்கோவன், உடனே இந்துக்களுக்கு எதிராக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். பதவியேற்கும் போது எடுத்த உறுதிமொழிக்கு மாறாக இந்துக்களுக்கு எதிராக  முதலமைச்சரும், அமைச்சர்களும் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினர். இந்து முன்னணி பிரச்சனையை முன்னெடுக்கும் போது பிறர் துணைக்கு வருகிறார்களா என பார்க்காமல் இந்துக்களுக்கான பணிகளை தொடருவோம் என இளங்கோவன் தெரிவித்தார்.

மேலும் படிக்க | பாஜகவுக்கு தண்ணிகாட்டும் ஹேமந்த் சோரன் -‘ஆபரேஷன் தாமரை’ ஜார்க்கண்டில் வெற்றிபெறுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link