ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நடுவீரப்பட்டு ஊராட்சியில் உள்ள எட்டியாபுரம் எட்டியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் சதீஷ்(31). இவர் நடுவீரப்பட்டு ஊராட்சியில் ஏழாவது வார்டு உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஏற்கனவே தனது கணவனை கொலை செய்த லோகேஸ்வரி என்கின்ற எஸ்தர் (45) என்பவர் டாஸ்மாக்கில் இருந்து சரக்கு வாங்கி வந்து வீட்டில் வைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்து வந்துள்ளார்.  இது குறித்து சதீஷ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து தொடர்ந்து எஸ்தரிடம் இந்த பகுதியில் சரக்கு விற்க வேண்டாம் என்று அழுத்தம் கொடுத்துள்ளார்.

மேலும் படிக்க: என்னை திருமணம் செய்தால் அரசு வேலை… 8 திருமணம் செய்து மோசடி செய்த பலே பெண்!

esther

இதனால் லோகேஸ்வரியின் வருமானம் பாதித்துள்ளது. இதில் கடுப்பான எஸ்தர் சதீஷை தன் வீட்டிற்கு அழைத்து சரமாரியாக தலையில் வெட்டி கேட்டிற்கு வெளியே கொண்டு வந்து போட்டுவிட்டு வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டார்.  இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சோமங்கலம் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

dmk

யோகேஸ்வரி என்கின்ற எஸ்தர் ஏற்கனவே விபச்சார தொழில் செய்து வந்ததாகவும் அதன் பின்பு தற்போது மது வியாபாரம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.  சதீஷ் திருமணம் ஆகாதவர்  என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் யோகேஸ்வரி என்கின்ற எஸ்தரை பிடித்தால் மட்டுமே எத்தனை பேர் சேர்ந்து கொலை செய்தார்கள் என்ற உண்மை வெளிவரும் என காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: நீட் தேர்வை மிஞ்சிய டிஎன்பிஎஸ்சி -தேர்வறையில் பெண்ணுக்கு நடந்த அவலம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link