ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவம் அடிக்கடி அரங்கேறும். இந்நிலையில், கடந்த 27ம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து, 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளத்துறை அனுமதி பெற்று மீன்பிடிக்க சென்றனர். அப்போது, தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. கைது செய்யப்பட்ட 6 மீனவர்களையும் மன்னார் கடற்படை முகாமுக்கு இலங்கை கடற்படை அழைத்து சென்று விசாரித்தனர்.

இதனையடுத்து, இலங்கை கடற்படையினரால் கைது செய்யஓஅட்ட மீனவர்கள், கடந்த 29 ந்தேதி அந்நாட்டு மீன் வளத்துறை அதிகாரிகளிடம் இவர்கள் ஒப்படைக்கப்பட்டனர். எல்லை தாண்டி மீன்பிடித்தது, தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தியது, அந்நாட்டு கடல் வளங்களை சேதப்படுத்தியது என அவர்கள் மீது வழக்குப் பதிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டபோது, வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் 12ஆம் தேதி வரையான இன்று வரை சிறையில் அடைக்க கடந்த 29 ந்தேதி உத்தரவிட்டிருந்தார். இதனை அடுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் ஆறு பேரும் இலங்கை வவுனியா சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

மேலும் படிக்க | சீன உதவியை விட இந்திய உதவிகளே எமக்கு அதிகம் கிடைத்துள்ளது: மீனவ கூட்டுறவு சங்க செயலாளர்

இந்நிலையில், மீனவர்களின் கைது சம்பவத்தை கண்டித்து ராமேஸ்வரம் மற்றும் அனைத்து விசைப்படகு மீனவர்கள் அவசர கூட்டம் நடத்தி மீனவர்களை விடுதலை செய்யும் வரை காலவரையற்ற தொடர் போராட்டம் நடத்துவது என முடிவு செய்ததுடன் கடந்த மூன்று நாட்களாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று மீனவர்களின் சிறைகாவல் நிறைவடைந்த நிலையில் மீண்டும் வழக்கானது நீதிமன்றத்திற்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ராமேஸ்வரம் மீனவர்கள் ஆறு பேரையும் நிபந்தனையுடன் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், படகு உரிமையாளர்கள், 30-3-2023 அன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும், இல்லையென்றால் படகு அரசுடைமையாக்கப்படும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து மீனவர்கள் ஆறு பேரும் அங்கிருக்கும் இந்திய தூதரகத்தின் மூலம் ஓரிரு நாட்களில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | Emergency Aid: இலங்கைக்கு 25 மில்லியன் டாலர் அவசரகால கடனுதவி தரும் ஆஸ்திரேலியா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link