திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாது மலை நெல்லிவாசல் நாடு பகுதியை  சேர்ந்தவர் வேடி, இவரது மகன் சிவா(11). சிறுவனின் பெற்றோர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டனர்.  இதனால் மேல்பட்டு கிராமத்தில் உள்ள தனது தாய் மாமா வெங்கடாசலம் அரவணைப்பில் இருந்து வந்தார். மேலும் சிறுவன் சிவா அப்பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான்.

மேலும் படிக்க | பிறந்த பச்சிளம் பெண் குழந்தையை கடலில் வீசி கொலை!

இந்நிலையில் நேற்று இரவு சிவா வீட்டின் ஒர் அறையில் துாங்கிக் கொண்டிருந்தான்.  அப்பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது.  அப்போது சிவா துாங்கிக் கொண்டிருந்த அறையின் மேற் கூரை மீது பயங்கர சத்தத்துடன் இடி தாக்கியதில் சிவா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

idi

இது குறித்து வெங்கடாசலம் கொடுத்தவர் புகாரின் பேரில், திருப்பத்துார் கிராமிய போலீசார் அங்கு சென்று இடித்தாகி இறந்த சிவாவின் உடலை மீட்டு திருப்பத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இடி தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: ’உத்தமர் போல பேசும் மகா நடிகர் ஓபிஎஸ்’ ஜெயக்குமார் கடும் தாக்கு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link