அதிமுக தலைமை பிரச்சனையை தொடர்ந்து, கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் அக்கட்சியின் பொதுக்குழு நடைபெற்றது. அங்கு பொதுகுழு நடைபெற்றுகொண்டிருந்த அதே வேளையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தின் அருகே இபிஎஸ் – ஓபிஎஸ் தரப்பினருக்கு இடையே கலவரம் ஏற்பட்டது. இதில், பொதுச்செத்து உள்பட பல பொருள்களுக்கு சேதம் ஏற்பட்டது. வன்முறையை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர். 

இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், தலைமை அலுவலகத்தின் சாவியை இபிஎஸ் தரப்பிடம் கொடுக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம்  ஜூலை 20ஆம் தேதி உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டுக்குச் சென்றது. 

மேலும் படிக்க | மக்கள் மீது சுமையை சுமத்தியுள்ளது அரசு – ஓபிஎஸ் குற்றச்சாட்டு

ஓபிஎஸ்-ன் மனுவை விசாரித்து உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக இபிஎஸ் தரப்பையும் மற்றும் தமிழ்நாடு அரசு தரப்பையும் பதிலளிக்கும்படி உத்தரவிட்டது. தொடர்ந்து, தமிழ்நாடு அரசு தரப்பு,’வன்முறை நடைபெற்றதாலும், பொது அமைதிக்கு குந்தகம் விழைவித்ததாலும் அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவையே தமிழ்நாடு அரசு பின்பற்றுகிறது” என பதிலளித்தது. 

இபிஎஸ் தரப்போ,”ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. எனவே, அவரின் இந்த மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொள்ள இயலாது. மேலும், அவர் தலைமை அலுவலகத்தில் அனுமதியில்லாமல் புகுந்து ஆவணங்களை திருடிச்சென்றுள்ளார்” என பதிலளித்திருந்தது.

இதைத் தொடர்ந்ந்து, இந்த வழக்கு  உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை பரிசீலித்த நீதிமன்றம், ஓபிஎஸ் தரப்பிடம் விசாரணை மேற்கொண்டது. அப்போது, எப்போது அலுவலகம் தொடர்பான பிரச்சனை உண்டானது என நீதிபதிகள் கேட்டதற்கு, இரு தரப்பும் அலுவலகத்திற்குள் செல்ல நினைத்தபோதுதான் என்று ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் பதிலளித்தார். 

சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவை முழுமையாக நீதிபதிகள் கேட்டறிந்தனர். தொடர்ந்து பேசிய நீதிபதிகள்,”ஒரு கட்சியின் அலுவலகத்திற்கு சீல் வைத்தால், அந்த கட்சி எப்படி இயங்கும். ஜனநாயக முறைப்படி ஒரு கட்சி இயங்க அனுமதிக்க வேண்டும். 

நீங்கள் சீல் வழக்கை தாக்கல் செய்து, உங்கள் உரிமையை நிலைநாட்ட முற்படுங்கள். வருவாய்த்துறை அதிகாரிகளின் முதல் தகவல் அறிக்கையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் பிரச்சனை இல்லை, அதன் சுற்றியுள்ள பகுதிகளில்தான் கலவரம் நடந்ததாக குறிப்பிட்டுள்ளது. தலைமை அலுவலகம் தொடர்பாக எந்த குற்றச்சாட்டும் இல்லை” என்றனர். தொடர்ந்து, ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், ஓபிஎஸ் – இபிஎஸ் தொடர்பான மனுக்களுக்கு, இந்த உத்தரவு செல்லாது எனக் கூறி உத்தரவிட்டார். 

மேலும் படிக்க | மின் கட்டண உயர்வால் இலவச மின்சாரம் கேள்விக்குறி – முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link