சேலம் மாநகராட்சி செவ்வாப்பேட்டை 30 வது வார்டு அய்யாசாமி தெரு உள்ளது. இப்பகுதியின் கவுன்சிலர் திமுக கட்சியை சேர்ந்த அம்சா. கடந்த 15 நாட்களுக்கு முன்பு குடிநீர் செல்லும் குழாயில் பழுத்தாகியுள்ளது. இதுகுறித்து திமுக பெண் கவுன்சிலர் அம்சா சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் குடிநீர் செல்லும் குழாயை விரைந்து சீர்படுத்த உத்தரவிட்டுள்ளார். உடனடியாக சம்பந்த இடத்திற்கு வந்த சேலம் மாநகராட்சி பணியாளர்கள் குடிநீர் குழாயில் உள்ள பழுதினை கண்டறிந்து மூன்று வீடுகளில் உள்ள குழாய்களில் அடைப்பு இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

மேலும் படிக்க | பெண் ஓட்டிச் சென்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரென்று தீப்பற்றி எரிந்தது: திண்டுக்கல்லில் பரபரப்பு

அதன்பின் இரண்டு வீடுகளில் உள்ள குடிநீர் குழாயை சரி செய்த சேலம் மாநகராட்சி பணியாளர்கள் மூன்றாவது வீட்டிற்கு சென்றபோது வீடு பூட்டி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாநகராட்சி பணியாளர்கள் மூன்றாவது வீட்டை சீர் செய்யாமல் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அடுத்தநாள் திமுக பெண் கவுன்சிலர் நேரடியாக அப்பகுதிக்குச் சென்று பணிகள் குறித்த ஆய்வு செய்துள்ளார். அப்போது மூன்றாவது வீடு குடிநீர் குழாயை சரி செய்வதற்கு பிளம்பரை அழைத்து வந்து சரி செய்துள்ளனர். பிளம்பருக்கான கூலியை கவுன்சிலர் கொடுப்பதாகவும், பைப் வாங்கிய செலவை வீட்டின் உரிமையாளர் ஏற்றுக்கொள்ளுமாறு கூறியதாக கூறப்படுகிறது. 

இதற்கு வீட்டில் உரிமையாளர் மறுப்பு தெரிவித்த நிலையில் திமுக பெண் கவுன்சிலர் மற்றும் வீட்டின் உரிமையாளர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் அப்பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். அப்போது திமுக பெண் கவுன்சிலர் அவ்வீட்டின் உரிமையாளரை பார்த்து காரி உமிழ்ந்துள்ளார். அதனை அங்கிருந்து ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். தற்போது அந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.

மேலும் படிக்க | தற்கொலை செய்து கொண்டது போல் நாடகமாடிய போதை ஆசாமி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link