பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தமிழ்நாடு தலைவர் முகமது சேக் அன்சாரி நேற்று சென்னை புரசைவாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், கடந்த வியாழக்கிழமை நாடு முழுவதும் 100 கணக்கான பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர்கள், நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனநாயக விரோத கைது இதை கண்டிகிறது எங்கள் அமைப்பு ,ஒட்டு மொத்த ஜனநாயக அமைப்புகளும் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் இந்த சூழலில் எங்களை விரும்பாத சிலர் எங்கள் மீது அவதூறுகளை அள்ளி தெளிகுறார்கள் என கூறினார்.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டை வீச கூடிய நிகழ்வுகள் ஆங்கே ஆங்கே நடந்து கொண்டு இருக்கிறது.நாங்கள் சட்ட ரீதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் எங்கள் மீது எந்த குற்றமும் இல்லை என்பதை வென்று காட்டுவோம் என்று கூறினார். போராட்டத்தின் மூலம் நாங்கள் வெற்றி பெறுவோம் ,பாஜகவை சேர்ந்த சிலர் எங்கள் மீது குற்றத்தை முன் வைத்து வருகிறார்கள் .அண்ணாமலை மிரட்டும் தோனியில் பேசி இருக்கிறார்.இது போன்ற ஜனநாயக விரோத பேச்சை பாப்புலர் ஃப்ரண்ட் கண்டிகிரது.

மேலும் படிக்க | சென்னைக்கு ஆபத்தா? 5 ஆண்டுகளில் 29% பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்படுமா?

பாஜக தலைவர்களுக்கு நான் சொல்லி கொள்ள விரும்புவது என்ன வென்றால் நீங்களே உங்களுக்கு பாதுகாப்பு வேணும் என்பதற்காக திட்டமிட்டு நீங்கள் பெட்ரோல் எரிகுண்டுகளை வீசி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடும் வகையில் இதை செய்துள்ளீர்கள்.

நாங்கள் இதற்கு முன்பு இது போன்ற செயல்களில் ஈடுபட்டதாக எந்த நிகழ்வும் இல்லை ஆனால் பாஜகவினர் இது போன்று (பெட்ரோல் குண்டு வீச்சு) செயல்களில் ஈடுபட்ட பல நிகழ்வுகள் உண்டு எனவே காவல் துறை இதில் தனி கவனம் செலுத்தி விசாரிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன். முஸ்லிம்களை நோக்கி இதை திருப்பி விடாமல் யார் உண்மை குற்றவாளிகள் என்று விசாரிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

பாப்புலர் ஃப்ரண்ட் தான் இதை செய்தது என்ற கோணத்தில் விசாரிக்காமல் உண்மையை விசாரிக்க வேண்டும். எங்கள் அமைப்பு தடை செய்ய முடியாத ஒரு அமைப்பு ..எங்களை தடை செய்ய எந்த வித ஆதாரமும் கிடையாது.ஜனநாயக ரீதியிலான அமைப்பு இதை தடை செய்ய முடியாது என கூறினார்.

மேலும் அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் ஆர் எஸ் எஸ் இன் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது. உண்மை குற்றவாளிகள் யாராக இருந்தாலும் (அது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்களாக) கைது செய்யப்படுவதில் எங்களுக்கு எந்த ஆட்சியேபமும் இல்லை.

ஆளுநர் தொடர்ந்து பல்வேறு தவறான செய்திகளை பரப்பி வருகிறார்..ஆளுநர் ஆர் எஸ் எஸ் அமைப்பின் ஆளாக செயல்படுகிறார்.

நாகாலாந்து மக்களுக்கு துரோகம் செய்து அந்த மக்களால் விரட்டி அடிக்க பட்ட நபர் தான் ஆளுநர்..ஆளுநர் என்பதாலேயே அவர் தூய்மையான நபர் என்று ஆகி விடாது.

பாப்புலர் ஃப்ரண்ட் இந்தியாவின் அமைப்பு இந்த நாட்டிற்காக தான் வேலை செய்து கொண்டு இருக்கிறது.நாங்கள் ஏன் பாக்கிஸ்தான் வாழ்க என்று சொல்ல வேண்டும் ..வேண்டும் என்றே திசை திருப்ப இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். சிறுபான்மை மக்களின் உரிமைகளை வென்றெடுக்க பாபுபுலர் பரண்ட் ஆப் இந்தியா உழைத்து வருகிறது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் 13 வருட காலத்தில் ஒட்டு மொத்த பண பரிவர்த்தனை 60 கோடி தான்.எங்களிடம் எல்லாவற்றிற்கும் ஆதாரம் இருக்கிறது. இயற்க்கை சீற்றங்களின் பொது மக்கள் அளித்த பணத்தை மக்களுக்கே தான் செலவு செய்தோம்..ஜாதி மத பேதம் இன்றி அனைவருக்கும் எங்கள் உயிரை குடுத்து வேலை செய்யும் அமைப்பு …இவர்கள் சொல்கின்ற கற்பனை கதைகள் இந்தியா முழுவதும் 22 வங்கி கணக்குகள் இருக்கிறது ..இதில் ஒரு வங்கி கணக்கை தவிர எல்லாத்தையும் அமலாக்கத்துறை முடக்கிவைத்துள்ளது.

தமிழகத்தில் மூன்று வங்கி கணக்குகள் உள்ளதாக கூறினார்.

இந்தியாவில் ஆர் எஸ் எஸ் தான் தீவிர வாத அமைப்பு.. எங்களுக்கு சொந்த அலுவலகம் கூட கிடையாது…மக்கள் பணத்தில் மக்களுக்காக இயங்கி கொண்டு இருக்கிறோம். மேலும் பாஜகவினர் அதிகாரத்துக்கு வருவதற்கு முன் இருந்தே எங்களை குறி வைத்து இயங்கி வருகிறார்கள் என கூறினார்.

மேலும் படிக்க | கோவை மாநகர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: வானதி சீனிவாசன் கடும் கண்டனம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link