காஞ்சிபுரத்தில் யோகா பயிற்சி நிலையம் நடத்தி பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு யோகா கலையை பயிற்றுவித்து வருபவர் யோகா மாஸ்டர் நிர்மல் குமார்.  இவர் யோகாசனத்தில் பல்வேறு விதமான சாதனைகள் நிகழ்த்தி உள்ள நிலையில் தண்ணீரில் மிதந்தவாறு கடினமான யோகாசனங்களை செய்து காட்ட முடிவு செய்தார்.  அதன்படி இன்று காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் உள்ள நீச்சல் குளத்தில் பொதுமக்கள் மற்றும் நீச்சல் வீரர்கள் முன்னிலையில் யோகாசனம் செய்து காட்டும் நிகழ்வு நடைபெற்றது.

மேலும் படிக்க | பள்ளிகளுக்காக நிதி ஒதுக்குவாரா முதலமைச்சர்? ஆர் பி உதயகுமார் கேள்வி 

yoha

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் தலைமை தாங்கிட, யோக மாஸ்டர் நிர்மல் குமார் நீச்சல் குளத்தில் நீரில் மிதந்தவாறு யோகாசன கலையில் உள்ள பல்வேறு கடினமான யோகாசன வித்தைகளை அதிக மணி நேரம் நீரில் மிதந்துவாறு செய்து காட்டி அசத்தினார்.  

அதிக மணி நேரம் நீச்சல் குளத்தில் மிதந்தவாறு யோகா மாஸ்டர் நிர்மல் குமார் யோகாசனங்களை செய்து காட்டிய நிகழ்வு நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது.  யோகா மாஸ்டர் நிர்மல் குமாரின் சாதனையை நீச்சல் வீரர்களும் நகரின் முக்கிய பிரமுகர்களும் பார்வையிட்டு பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

yog

மேலும் படிக்க | சிலை கடத்தல் வழக்கு… ஆஜராகவில்லை என்றால் தள்ளுபடி செய்யப்படும் – உயர் நீதிமன்றம் உத்தரவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link