மதுரை புறநகர் கிழக்கு அதிமுக மாவட்ட செயலாளர்,வி.வி. ராஜன் செல்லப்பா திருப்பரங்குன்றத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், எடப்பாடியாருக்கு வலிமைமிக்க தீர்ப்பினை, கழகத் தொண்டர்கள் ஏற்கனவே வழங்கிவிட்டனர், அது மட்டும் அல்ல எடப்பாடி பழனிசாமிக்கு பின்னால் 63 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். அவர்கள் மட்டுமின்றி 2663 பொதுக்குழு உறுப்பினர்களில், மெஜாரிட்டியாக எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளர் என்று தேர்வு செய்தனர். சிலர் இடைக்கால தீர்ப்பை பெற்று சில அறிக்கையை விடுகின்றனர். இன்னும் இறுதி தீர்ப்பு வரவில்லை மேல்முறையீடு உள்ளது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கசப்பை மறக்க வேண்டும் என்று ஓபிஎஸ் கூறுகிறார், ஆனால் திமுகவுடன் தொடர்பு வைத்தவர்களை எப்படி மறக்க முடியும்? இனி வசந்த காலம் என்கிறார் ஒபிஎஸ், திமுகவில் தொடர்பு உள்ளவர்களை எப்படி வசந்த காலம் என்று ஏற்க முடியும். 

ஒபிஎஸ்ஸை இதுவரை யாரும் ஆதரிக்கிறோம் என்று சொல்லவில்லை. இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி பின்னால் ஆடாமல், அசையாமல் வலுவோடு இந்த இயக்கம் உள்ளது. மிகச்சிறந்த தலைமையாக எடப்பாடி பழனிசாமி தலைமை உள்ளது. திமுகவை எதிர்க்கக்கூடிய தலைமை எடப்பாடி பழனிசாமிதான். ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டு 1989ஆம் ஆண்டு சேவல் சின்னத்தில் போட்டியிட்டார் எடப்பாடி. அதுமட்டுமின்றி நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இப்படி பல்வேறு பதவிகள் பெற்று தன் உழைப்பால் உயர்ந்து எந்தத் தவறையும் செய்யாதவர் பழனிசாமி. 

Panneerselvam

ஓபிஎஸ் எடப்பாடியாரை அழைக்கிறார். அப்படி அவர் அழைப்பதற்கு அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை. அவர் அழைத்தது தவறு. அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று கூறுகிறார். ஆனால் திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் அவர் இருக்கிறார். நாங்கள் அதை எதிர்க்கிறோம். எப்படி ஒன்று சேர முடியும். ஓபிஎஸ் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது. திமுக தற்போது 15 சதவீதம் தாழ்வை நோக்கி சென்றுகொண்டுள்ளது. இதனால் எடப்பாடியாருக்கு தேர்தல் காலங்களில் தன்னிச்சையாக வெற்றி பெற வாய்ப்புள்ளது.

எப்பொழுது எல்லாம் தீர்ப்பு தனக்கு சாதகமாக வருகிறதோ, அப்போது தென் மாவட்டங்களுக்கு ஓபிஎஸ் வருகிறார், இதன் மூலம் தென் மாவட்ட பகுதிகளை உரிமை கொண்டாட முயற்சி செய்கிறார். தென் மாவட்டம் என்பது சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது. தென் மாவட்டத்தில் ஓபிஎஸ்க்கு தனி செல்வாக்கு என்பது கிடையாது. இலங்கைக்கு 50 லட்ச ரூபாய் நிதி வழங்குகிறார் அதை தமிழ்நாடு அரசின் மூலம் வழங்குகிறார், கட்சி சார்பாக அவர் கொடுக்கவில்லை, கட்சியிடம் அவர் அனுமதியும் பெறவில்லை.

EPS

சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு தமிழ்நாட்டுக்கு சொந்தக்காரராக எடப்பாடி உள்ளார், நிச்சயம் வெற்றி பெற்று இந்த இயக்கத்தின் நிரந்தர பொதுச்செயலாளராக பழனிசாமி வருவார். எங்களின் தலைமையாக திகழும் எடப்பாடியார் கட்டளை ஏற்று, தொடர்ந்து கழகப் பணியில் நாங்கள் செயல்படுவோம்” என்றார்.

மேலும் படிக்க | ஓபிஎஸ்ஸூக்கு எதிராக மேல்முறையீடு; எடப்பாடி போடும் கணக்கு

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link