ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் பாரதிதாசன் மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் படிக்கும் மாணவர்களை தினந்தோறும் பள்ளிக்கு ஏற்றி செல்ல வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில், வழக்கம்போல் இன்று காலை 6 மணி அளவில் சேந்தமங்கலம் பகுதியில் இருந்து பள்ளி மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்ல சேந்தமங்கலத்தில் இருந்து புறப்பட்டது.

பள்ளி வாகனம் புறப்பட்ட 200 மீட்டர் தொலைவில், அரக்கோணம் – காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வரும் பொழுது வண்டியில் திடீரென புகை வந்ததால் ஓட்டுநர் சுதாரித்துக் கொண்டு, அதிலிருந்து மாணவர்கள் நான்கு பேருடன் உடனடியாக இறங்கியுள்ளார். இறங்கிய டிரைவர் உடனடியாக தீயை அணைக்க வாகனத்தில் இருந்த தீயணைபானை கொண்டு தீயை அணைக்க முயற்சி  செய்துள்ளார்.

ஆனால் தீயானது மளமளவென பற்றி எறிய தொடங்கிவிட்டது. பின்பு நெமிலி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக அரக்கோணம் தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.

மேலும் படிக்க | தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை தகவல்

வாகன ஓட்டுநர் புகை வந்தவுடன் துரிதமாக செயல்பட்டு மாணவர்களுடன் கீழே இறங்கியதால் பெரும் பாதிப்பிலிருந்து தப்பினர்.  இதனால்  காஞ்சிபுரம் – அரக்கோணம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்து குறித்து காரணத்தை அறிய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் படிக்க | நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் வீட்டில் பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன ?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link