செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்ட புகழேந்தி, எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது தரப்பினரை கடுமையாக சாடினார். எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் ஜாதி சார்ந்த பேச்சுகளில் அதிக கவனம் செலுத்துவதாக அவர் குற்றம் சாட்டினார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக நிர்வாகி, ‘கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்களே, இந்த எடப்பாடி பழனிசாமியை யாரும் வரவேற்கவில்லை. எடப்பாடி பழனிசாமி குறித்து இன்னும் பல ரகசியங்கள் உள்ளன. அம்மா அவர்கள் சிறையில் இருந்தபொழுது என்னென்ன துரோக வேலைகள் செய்தார்கள் என்பது குறித்த பாகம் 2 விரைவில் வெளியாகும்.’ என்றார்.

தமிழகம் முழுவதும் இனிமேல் எடப்பாடி பழனிசாமியை தீய சக்தி பழனிசாமி என்று அழைக்கப்பார்கள் என்று புகழேந்தி அவருக்கு பட்டத்தை வழங்கினார். புகழேந்தி, ‘அதிமுகவில் உள்ள மூத்த நிர்வாகிகள் செங்கோட்டையன் செம்மலை போன்ற அண்ணன்கள் இந்த முட்டாள் பையன் எடப்பாடி பழனிசாமி பின்னால் நின்று வேடிக்கை எப்படி பார்க்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. செங்கோட்டையன் வேறு தற்பொழுது ஜாதி பற்றிப் ஆரம்பித்துள்ளார். ஜாதிய பத்தி பேசி உள்ளார். 

நீயும் கவுண்டர் நானும் கவுண்டர் தங்கமணியும் கவுண்டர் வேலுமணியும் கவுண்டர் பொன்னையன் கவுண்டர் எல்லோரும் கவுண்டர் தான். கவுண்டர்கள் தான் நாட்டை ஆள முடியும். இந்த கொங்கு மண்டலத்திற்கு தீரன் சின்னமலை வாழ்ந்த இந்த கொங்கு மண்டலத்திற்கு தூக்கு கயிறு நீ தொடாதே என்று சொல்லி தன்னுடைய கழுத்தில் இருந்து மாட்டிக்கொண்ட வரலாறு படைத்த தீரன் சின்னமலை சுதந்திரப் போராட்ட தியாகி சின்னமலை வந்த பிள்ளைகள் எடப்பாடி பழனிசாமியை காரி துப்புகிறார்கள்’ என அவர் செய்தியாளர்கள் முன்பு காரி துப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க | தேசிய கல்விக் கொள்கை; அரசியல் விமர்சனங்களை கடந்து செயல்படுத்த வேண்டும்; ஆனந்திபென் பட்டேல்

‘யாரும் உன்னை வரவேற்கவில்லை. அப்படி உன்னை வரவேற்றால் அவன் கொங்கு சமுதாயத்தை சேர்ந்தவனாக இருக்க முடியாது. ஜாதி பெயரை சொல்லி அரசியல் செய்கிறீர்களா? எம்ஜிஆர் அவர்களும் மறைந்த அம்மா அவர்களும் என்றைக்காவது ஜாதியை பற்றி பேசி உள்ளார்களா?’ என்று கேள்வி எழுப்பினார்.

எடப்பாடி பழனிசாமியின் பின்னால் யார் யார் உள்ளார்கள் என்பது யார் சொல்லி இவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்பது வெளியில் வரும். அவரைப் பற்றிய பல ரகசியம் உள்ளது. மாண்புமிகு அம்மா அவர்கள் சிறையில் இருந்த போது என்னென்ன துரோக செயல்கள் செய்தீர்கள் என்று அனைத்து உண்மைகளையும் பகுதி இரண்டாக வெளியிடுவேன்’ என்று அவர் மேலும் தெரிவித்தார். 

‘எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இருந்தால் தற்பொழுது உள்ள எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு, எடப்பாடி தொகுதியில் மீண்டும் போட்டியிட தயாரா? நானும் தேர்தலில் போட்டியிடுகிறேன். யார் ஜெயிப்போம் என்று பிறகு தெரியும்’ என்று ஆவேசமாக கூறினார். அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி என்று அழைக்கப்படும் இந்த பழனிசாமியை பொது எதிரியாக கருதி, அரசியல் ரீதியாக அவரை இன்று முதல் தீய சக்தி பழனிசாமி என்று அழைக்க வேண்டும்’ என்று கூறிய புகழேந்தி இந்த புதிய பட்டத்தை வெளியிட்டு அதற்கான துண்டு பிரசுரத்தையும் வெளியிட்டார்.

மேலும் படிக்க | PFI தடை; ஆதாரத்தை வெளியிட்டு தடை செய்யுங்க – கே.எஸ்.அழகிரி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Source link