கோவை: கோவையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இரண்டு இடங்களில் உள்ள அலுவலகங்களுக்கு அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) என்ற அமைப்பு நாட்டில் பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக கடந்த மாதம்  தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையின் போது பலர் கைது செய்யப்பட்டு பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன.

மேலும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளை சட்டவிரோத அமைப்புகளாக அறிவித்த மத்திய உள்துறை அமைச்சகம், இந்த அமைப்புகள் இந்தியாவில் செயல்பட 5 ஆண்டுகள் தடை விதித்து உத்தரவை பிறப்பித்தது. 

மேலும் படிக்க | மத்திய அரசு அதிரடி; PFI அமைப்பு மீது 5 ஆண்டு கால தடை!

ஒன்றிய அரசின் உத்தரவை செயல்படுத்தும் விதமாக தமிழகத்தில்  PFI அமைப்புக்கு தடைவித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் செயல்பட்டு வந்த பிஎஃப்ஐ அலுவலகங்களுக்கு அதிகாரிகள் சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஏற்கனவே சேலம், ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் பி.எப்.ஐ அலுவலகங்ளுக்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில், கோவை உக்கடம் கோட்டைமேட்டில் உள்ள பி.எப்.ஐ தலைமை அலுவலகம் மற்றும் வின்சென்ட் ரோட்டில் உள்ள அலுவலகத்துக்கு இன்று வட்டாட்சியர் சரண்யா தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனையடுத்து அந்த பகுதியில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் படிக்க | PFI உடன் 873 கேரள காவல் துறை அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா… உண்மை என்ன!

இதற்கு முன்னதாக, பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா தீவிரவாத அமைப்பை மத்திய அரசு தடை செய்த சில நாட்களுக்குப் பிறகு, தேசிய புலனாய்வு அமைப்பு அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றை வெளியிட்டதாக செய்திகள் வெளியாகின.

கேரள காவல் துறையில் உள்ள குறைந்தது 873 அதிகாரிகளுக்கு PFI அமைப்புடன் தொடர்பு இருப்பதாக அதிர்ச்சித் தகவல்தான் அவை. PFI உடன் தொடர்புடைய கேரள காவல்துறை அதிகாரிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலை தேசிய புலனாய்வு முகமை கேரள மாநில காவல்துறையிடம் சமர்ப்பித்ததாகவும் கூறப்படுகிறது.

தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் தொடர்பு இருப்பதாக மாநில காவல்துறைத் தலைவரிடம் NIA தகவல் அளித்ததாக வெளியான ஊடகச் செய்திகள் ஆதாரமற்றவை என கேரள போலீஸார் மறுத்துள்ளனர்.

மேலும் படிக்க | PFI-ஐ போல RSS அமைப்பையும் தடை செய்ய வேண்டும் -லாலு பிரசாத் யாதவ் வலியுறுத்தல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link