கடலூர்: மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம்  தீர்ப்பளித்தது. உறவினரே 15 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் கடலூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியிருக்கிறது. சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த அந்த நபர், தன்னைப் பற்றி யாரிடாமவது சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டி இருக்கிறார். ஆனால், அச்சத்தில் மாணவி பெற்றோரிடம் விஷயத்தை சொன்னதால் குற்றவாளிக்கு 5 ஆண்டுகளுக்கு பிறகு தண்டனை கிடைத்திருக்கிறது. இது போன்ற பாலியல் வன்புணர்வுகள், சீண்டல்கள் நடந்தால், அது பற்றி குடும்பத்தினரிடம் தெரிவிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் சம்பவம் இது.

கடலூர் புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் சேகர். இவரது மகன் 26 வயது கணேஷ், எலக்ட்ரிசியனாக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வரும் தனது உறவினர் வீட்டிற்கு கணேஷ் அடிக்கடி சென்று வரும் பழக்கத்தை வைத்துக் கொண்டுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு உறவினர் வீட்டிற்குச் சென்ற போது பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார் கணேஷ்.

சம்பவத்தன்று உறவினரின் மகள் 11 ஆம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட கணேஷ், மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். அதன்பிறகு மாணவியை மிரட்டியும் இருக்கிறார்.

மேலும் படிக்க | ‘ஒரு லைட் கூட மாற்ற முடியல, நாங்க வேணா எழுந்து போய்டவா’ – மாநகராட்சிக் கூட்டத்தில் திமுக கவுன்சிலர் புலம்பல்

இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்த கணேஷ், சிறுமி இதைப் பற்றி வெளியில் சொல்லமாட்டார் என்று நினைத்திருக்கிறார். ஆனால், பெற்றோரிடம் சிறுமி விஷயத்தை சொல்லிவிட்டார். தகவல் அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த பெற்றோர், மாணவியின் தரப்பில் கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

பாலியல் வன்புணர்வு தொடர்பான புகாரை பெற்ற போலீசார், உடனடியாக எலக்ட்ரீசியன் கணேஷை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை கடலூர் போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பை நேற்று (ஆகஸ்ட் 25 வியாழக்கிழமை) வழங்கிய நீதிபதி எம்.எழிலரசி, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கணேஷிற்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார். அதோடு, ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாவட்ட நிர்வாகம் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி எம். எழிலரசி உத்தரவிட்டார். இந்த தொகையை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் 30 நாட்களுக்குள் பெற்று மாணவிக்கு வழங்க வேண்டுமென உத்தரவில் தெரிவித்ததாக அரசு தரப்பு வழக்குரைஞர் தி.கலாசெல்வி கூறினார்.

மேலும் படிக்க | சி.வி சண்முகம் தாக்கல் செய்த மனு: வழக்குகள் சிபிசிஐடி-க்கு மாற்றம், விசாரணை தள்ளிவைப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link