பிரதமர் நரேந்திர மோடி தனது 72ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அதை முன்னிட்டு நாடு முழுவதும் பாஜகவினரும் பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்திவருகின்றனர். பிரதமர் பிறந்தநாளான இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு, தமிழ்நாடு பாஜக சார்பில் தங்க மோதிரம் போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில், பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாநகரில் பாஜகவினரால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் இணையத்தில் ஹிட் அடித்துள்ளது. ‘2024 மக்களவை தேர்தலில், மதுரை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பிரதமர் மோடி வெற்றி’ என்ற வாசகம் இடம்பெற்ற போஸ்டர் மதுரை மாநகர் முழுவதும் ஒட்டுப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | நரேந்திர மோடியின் பிறந்தநாள் பேனர் மீது கொடி கட்டிய விசிக!

பாஜகவினரால் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர் நகரில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதாவது, வரும் 2024 மக்களவை தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி மதுரையில் போட்டியிட வேண்டும் என்ற தங்களின் விருப்பத்தை  மதுரை பாஜகவினர் போஸ்டர் மூலம் தெரிவித்துள்ளனர். இந்த போஸ்டர் மதுரையில் மட்டுமின்றி, இணையத்திலும் வைரலாகி வருகிறது. 

பிரதமர் பிறந்தநாளை முன்னிட்டு ட்விட்டரில் ‘HappyBirthdaySir’ என டிரெண்டிங் ஆகி வருகிறது. பிரதமர் மோடி தனது பிறந்தநாள் அன்று நமீபியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சிறுத்தைகளை இன்று நாட்டிற்காக அர்ப்பணிக்க உள்ளார். இந்தியாவில் அழிந்த சிறுத்தை (Cheetah) இனத்தை பெருக்குவதற்கு, நமீபியா அரசுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து சிறுத்தைகளை இங்கு கொண்டு வரப்பட்டது

அதன்மூலம், 5 பெண் சிறுத்தைகள், 3 ஆண் சிறுத்தைகள் என மொத்தம் 8 சிறுத்தைகள் நமீபியாவில் இருந்து தனி விமானத்தில் இந்தியா வந்தடைந்தது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள குணே தேசிய பூங்காவில் நடைபெறும் விழாவில் இந்த சிறுத்தைகளை பிரதமர் மோடி நாட்டிற்காக அர்ப்பணிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | PM Narendra Modi Birthday: பிரதமருக்கும் எண் 8-க்கும் உள்ள சம்பந்தம் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEata

Source link