’அம்மா போட்ட உத்தரவு’ என்ற தலைப்பில் அவர் பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். அதில், எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தையும், அதிமுகவை ஓபிஎஸ்ஸிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறார். அந்த பதிவில், ” எதுக்காக அவரு டெல்லிக்கு போறாரு..கூப்பிட்டு வச்சு திட்ட போறாங்களா இல்லை எதையாவது கொடுக்கப் போறாங்களா..குழப்பத்திலேயே நடந்து வந்துங்கிட்டு இருக்கிறப்ப எதிரே ஒரு 72 வயது பாட்டி வந்து நின்னுக்கிட்டு தம்பி எடப்பாடி கையில மட்டும் இந்த கட்சி சிக்கிடக்கூடாது தம்பி…

தலைவரு ரத்தம் சிந்தி வளர்த்ததுப்பான்னு கண்ணை கசக்க… அதெல்லாம் ஒன்னும் ஆகாதண்ணேன்னு நான் ஆறுதல் சொல்ல ..அப்பவும் அந்த பெருசு என்ன விடுறதா இல்ல..உறுப்பினர் கார்டை சொக்காவோட உள்பாக்கெட்டுல இருந்து எடுத்து காட்டிக்கிட்டு, தம்பி எடப்பாடி கையில கட்சி சிக்குறதும் எலக்ட்ரிக் சுடுகாட்டு மெஷினுக்கிட்ட டெட்பாடி சிக்குறதும் ஒன்னுதான் தம்பின்னு அந்த ஆளு விடாம பினாத்த, எனக்கு காண்டாகி அப்படி எதுவும் நடக்காது. அப்படி எடப்பாடி துட்டு தான் எங்கும் ஜெயிக்கும்னா வெக்காளி எள்ளும் தண்ணியும் எறைச்சுப்புட்டு எம்.ஜி.ஆரு புள்ளி வச்சு வரைஞ்ச கட்சிய எடப்பாடி கொள்ளி வச்சு முடிச்சாருனு தலைமுழுக வேண்டியது தான்னு கோபத்துல சொல்லிப்புட்டு வந்திட்டேன்.

மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி விவகாரம்: நக்கீரன் நிருபர்-புகைப்படக் கலைஞர் மீது சமூக விரோதிகள் தாக்குதல்

ஆனாலும் ராவெல்லாம் உறக்கம் வரல. விடியல்ல எழுந்து தலைவர் படத்தையும் அம்மா படத்தையும் எடுத்து வச்சு வெகுநேரம் வேண்டுனேன். எப்படியாவது கட்சியை காப்பாத்திப்புடுங்கன்னு உருகி  கும்பிட்டேன். ஏன்டா உசுரோட இருக்கும் போதும் நாங்க தான் கட்சிய காப்பாத்துனோம் இப்ப செத்த பெறகும் நாங்க தான் கட்சிய காப்பாத்தனுமாக்கும். பணத்தை வச்சுக்கிட்டு ஆடுற எடப்பாடிய, ஜனத்த வச்சு உங்களால் வெரட்ட முடியாதா… தொண்டர்கள திரட்டி அந்த டெண்டர் கூட்டத்தை துரத்தி அடிக்கிறத விட்டுப்புட்டு, எங்ககிட்ட வந்து நின்னு புலம்பறியே உனக்கு வெட்க மா இல்லயா ..போ ஓ.பி.எஸ் பின்னாடி போ மத்ததெல்லாம் தானா நடக்கும்னு அதட்ட  அப்பதான் புரிஞ்சது அண்ணாவின் வாரிசு மக்கள் திலகம்னா. 
 
மக்கள் திலகத்தின் வாரிசு புரட்சித்தலைவி அம்மான்னா. அம்மாவின் அரசியல் வாரிசு அந்த மகராசி ரெண்டு தடவை மகுடம் சூட்டி அடையாளம் காட்டுன அண்ணன் ஓ.பி.எஸ் தானே். பெறகென்ன என் புத்திக்கு உரச்சத சுத்தியிருக்கும் தொண்டர்களுக்கு எடுத்துச்சொல்லி எடப்பாடி கையில 
அண்ணா தி.மு.க வ சிக்காம காப்பாத்தியே ஆகனும்ப்போய். வெக்காளி டெண்டரா தொண்டரா-ன்னு ஒரு கை பார்க்க வேண்டியதான் மாப்ளேய். நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் எடப்பாடி பணத்தை இப்படை வெல்லும்… வெற்றிவேல் வீரவேல்” என எழுதியிருக்கிறார். 

மேலும் படிக்க | தீண்டாமையால் ஒதுக்கப்பட்ட சிறுவர்கள்.. தின்பண்டம் அனுப்பி பாசத்தை பொழிந்த ‘மதுரைக்காரர்கள்’

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link