சென்னை: இறந்துவிட்ட ஒருவர் திடீரென உயிருடன் வந்த சம்பவம் கூடுவாஞ்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அம்பேத்கர் நகர், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் 72 வயது சந்திரா. இவருடைய கணவர் சுப்பிரமணி கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். சந்திரா பஜனை கோவில் தெருவில் உள்ள, தனது மகன் வடிவேலுவுடன் வசித்து வருகிறார். வயதான சந்திரா அடிக்கடி கோவிலுக்கு செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. குறிப்பாக சந்திரா சிங்கப்பெருமாள் அருகே உள்ள கோவிலுக்கு அடிக்கடி சென்று வருவார்.

வழக்கம்போல நேற்று சந்திரா சிங்கப்பெருமாள் கோவிலுக்கு சென்று வருவதாக வீட்டில் இருந்தவர்களிடம் தெரிவித்துவிட்டு சென்றுள்ளார். அவர் வீட்டுக்கு வராத நிலையில் காலை 8.30 மணிக்கு செங்கல்பட்டு தாம்பரம் இடையிலான ரயில் தண்டவாளத்தில், வயதான மூதாட்டி ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிர் இழந்துள்ளார். இது குறித்த தகவல்கள் மகன் வடிவேலுவுக்கு நண்பர்கள் மற்றும் ஊர் மக்கள் மூலமாக தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க | Viral News: தன்னை கடித்த பாம்பை கடித்து குதறிய 2 வயது சிறுமி!

சந்திரா தான் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக, அனைவரும் நினைத்து விட்டார்கள். உயிரிழந்த மூதாட்டி சந்திராவின் உடலை செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில், உருவம் ஒத்துபோணதால் உயிரிழந்தது தனது அம்மா தான் என வடிவேல் உறுதி செய்துவிட்டார். எனவே போலீசார், சந்திராவின் உறவினர்களிடம் உடலை ஒப்படைத்தனர். 

சந்திரா உயிரிழந்ததாகவே நினைத்து, தகவல் அறிந்த உறவினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வந்து, இறுதிச் சடங்குகள் செய்துள்ளனர். ஊரெங்கும் சந்திராவிற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்ட போட்டு, மாலை மரியாதை உடன் தாரை தப்பட்டை முழங்க அந்த உடல் அடக்கம் செய்யப்பட்டது. 

மேலும் படிக்க | மீண்டும் மஞ்சப்பை திட்டம் மூலம் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்துள்ளது: அமைச்சர் மெய்யநாதன் 

இந்நிலையில் வழக்கப்படி சந்திராவிற்கு படையல் போட்ட பொழுது, மூதாட்டி சந்திரா வீட்டிற்கு வந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்களுக்கு மகிழ்ச்சியும் ஏற்பட்டது. சந்திரா திரும்பி வந்துவிட்ட செய்தியை குடும்பத்தினர் உடனடியாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதுகுறித்து உறவினர்கள் மற்றும் சந்திராவிடம் தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்ததாக கருதி அடக்கம் செய்யப்பட்ட நபர் மீண்டும் உயிருடன் திரும்பி வந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தகனம் செய்யப்பட்ட உடல், யாருடையது என்பது காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் படிக்க | உக்ரைனில் போரினால் முடங்கிய விவசாய உற்பத்தி; வயல்களில் பொழியும் குண்டு மழை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link