தமிழகத்தில் தொடர்ந்து மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. வேலூர் மாவட்டம் குடியாத்தம், காமாட்சி அம்மன் பேட்டை பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவரது மகள் கார்த்திகாதேவி (22) இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் (அப்பல்லோ நர்சிங் இன்ஸ்டியூட்) பிஎஸ்சி நர்சிங் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று கல்லூரியில் இருந்து இரவு தனது சொந்த ஊரான குடியாத்தம் வந்துள்ளார்.

இதனிடையே இன்று அதிகாலை கார்த்திகாதேவி வீட்டில் தனது அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை கண்ட அவரது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து, இதுகுறித்து குடியாத்தம் நகர போலீசாருக்கு தகவல் அளித்தனர். 

தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் நகர போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், போலீஸார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் படிக்க | சாலையில் இறங்கி துணி துவைத்து, தவம் செய்த இளைஞரால் பரபரப்பு!

மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நர்சிங் கல்லூரி மாணவி துக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவர்கள் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | சென்னை: பள்ளி மாணவியை கடத்த முயற்சி, கீழே குதித்து தப்பித்த மாணவி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link