அரசு ஊழியர்களுக்கு ஓய்வுக்கு பின்னர் எதிர்கால தேவையை கருத்திற்கொண்டு அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது, ஆனால் தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு ஓய்வுக்கு பிறகுஅவர்களின் எதிர்கால தேவையை நினைத்து கவலை அடைகின்றனர். அதேசமயம் அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு எதிராக தங்களது பொருளாதார நிலையை சரிசெய்திட வேண்டும் என்றே பலரும் விரும்புகின்றனர், அதற்கு நமக்கு ஒரு சிறந்த முதலீடு தேவை. அந்த முதலீட்டு திட்டத்தில் நாம் முதலீடு செய்யும் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். ஆபத்து இல்லாமல் நம்பகத்தன்மையுடன் இருக்கும் முதலீட்டுகளில் பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) மற்றும் தேசிய ஓய்வூதிய அமைப்பு (என்பிஎஸ்) பிரபலமானவை.

என்பிஎஸ் விருப்ப ஓய்வூதிய சேமிப்புத் திட்டமாகும், இது சந்தாதாரர்களின் திட்டமிட்ட சேமிப்பிற்கு உதவுகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலமாக உங்கள் எதிர்கால தேவையை நீங்கள் ஓய்வூதிய வடிவில் பெற்று பூர்த்தி செய்துகொள்ள முடியும். இது இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவர்களது ஓய்வுக்கு பின்னர் போதுமான வருமானத்தை கொடுக்கிறது. தனியார் துறை ஊழியராக இருந்தால் உங்களால் முடிந்த தொகையை இந்த திட்டத்தில் முதலீடு செய்து கொள்ளலாம். இப்போது 26 வயதாக இருக்கும் ஒரு நபர் என்பிஎஸ் திட்டத்தில் மாதம் ரூ.4000 முதலீடு செய்ய தொடங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம், அவர் 60 வயது வரை இந்த திட்டத்தில் முதலீட்டை தொடர்ந்தார் என்றால் அவருக்கு மாத ஓய்வூதியமாக ரூ.35,000க்கு மேல் கிடைக்கும், இந்த திட்டத்தில் 11% வட்டி கணக்கிடப்படுகிறது.

 26 வயதில் தொடங்கி 60 வயது வரை முதலீடு செய்யும்போது இந்த திட்டத்தில் மொத்தமாக ரூ.16,32,000 இருக்கும், இதில் மொத்த கார்பஸ் ரூ.1,77,84,886 ஆக இருக்கும். நீங்கள் பெறும் மொத்தத் தொகை ரூ.1,06,70,932 ஆகவும், மாத ஓய்வூதியம் ரூ. 35,570 ஆகவும் இருக்கும். 61 வயது தொடங்கியதிலிருந்து உங்களுக்கு மாதந்தோறும் ரூ. 35,000 ஓய்வூதியமாக கிடைக்கும்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, (https://www.facebook.com/ZeeTamilNews/) ட்விட்டரில் @ZeeTamilNews (https://twitter.com/ZeeTamilNews) மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews (https://t.me/ZeeTamilNew) என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link