கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவக்காளிபாளையம் தோட்டக்காட்டூரில், திருமணமான 4 மாதமே ஆன இந்து என்ற பட்டதாரி பெண், முகத்தில் பிளாஸ்டிக் கவரை சுற்றி டேப் வைத்து ஒட்டிக்கொண்டு ஹீலியம் வாயுவை, டியூப் மூலமாக சுவாசித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவக்காளிபாளையம் தோட்டக்காட்டூரை சேர்ந்தவர் திருவேங்கடசாமி மரகதமணி தம்பதியரின் மகள் இந்து, பிஇ கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துவிட்டு கோவையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கும் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நல்லகண்டன் பாளையம் துளசி நகரை சேர்ந்த விஷ்ணுபாரதி என்பவருக்கும் இடையே கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது.

விஷ்ணுபாரதி சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தின் வேலை செய்து வந்தார். திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவி இருவருமே சென்னையில் தங்கி வேலை செய்து வந்தனர்.  இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் பொலவகாளிபாளையம் அருகே உள்ள தோட்டக்காட்டூரில் உள்ள இந்துவின் பாட்டி உடல்நிலை சரியில்லாத நிலையில் பாட்டியை பார்ப்பதற்காக வந்துள்ளார்.  நேற்று மதியம் வீட்டிலிருந்து தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்ட இந்து இரவு வரை வெளிய வரவில்லை.

மேலும் படிக்க | பாஜகவின் ஊதுகுழலாக செயல்படும் பச்சமுத்துவின் எம்பி பதவியை பறிக்க வேண்டும்: ஜிஜி சிவா

இதனால் அருகில் இருந்தவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த பொழுது முகத்தில் பிளாஸ்டிக் கவரை  சுற்றி கழுத்தை சுற்றி முழுமையாக டேப் வைத்து ஒட்டிவிட்டு ஹீலியம் வாயுவை அந்த கவருக்குள் செலுத்தி தற்கொலை செய்து கொண்டிருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.  தகவல் அறிந்த கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் இந்துவின் சடலத்தை கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.  இவர் ஹீலியம் வாயு அடங்கிய சிலிண்டரை ஆன்லைனில் வாங்கி இருப்பது தெரிய வந்தது. திருமணமாகி நான்கு மாதங்களே ஆவதால் இந்துவின் தற்கொலைக்கான காரணம் குறித்து கோபி கோட்டாட்சியர் மற்றும் டிஎஸ்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க | காய்கறி கடையில் காசு கேட்டு கலாட்டா செய்த காங்கிரஸார்… மூவர் சஸ்பெண்ட் – பாத யாத்திரை பரிதாபங்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link