தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் உள்ள ரோச் பூங்கா அருகே இன்று காலையில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வந்தனர்.  அப்போது கடலில் மிதந்த படி பச்சிளம் குழந்தை உடல் கிடப்பதை பார்த்த மக்கள் தூத்துக்குடி தென்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்த நிலையில் பச்சிளம் குழந்தை உடல் கடலில் கிடப்பதால் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.  அவர்கள்  வந்து தான் விசாரணை நடத்த வேண்டும் என என்பதால் பச்சிளம் குழந்தையின் உடல் கடலில் பாறாங்கல் இடையில் மிதந்து கிடந்தது. 

அப்போது பச்சிளம் குழந்தையின்  உடலை மீன்கள் கடித்து கொதறியது பார்ப்பவர்கள் நெஞ்சை பதற வைத்தது.  மேலும் சம்பவ இடத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு மேலாக கால தாமதமாக வந்த மரைன் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.   மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் யாரோ மர்ம நபர்கள் பையில் குழந்தையை கொண்டு வந்து  கடலில் வீசியதாக தெரியவந்துள்ளது.

thothukudi

மேலும் படிக்க | சேலம்; சில்மிஷ இயக்குநரை சிறையில் அடைத்த காவல்துறை; இளம் பெண்கள் சரமாரி புகார்

மேலும் யார் குழந்தையை கொண்டு வந்து கடலில் வீசினார்கள்  என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்த குழந்தை தொப்புள் கொடியுடன் குழந்தை இருப்பதால் சமூக வலைத்தளங்களில்  உள்ள வீடியோக்களை பார்த்து வீட்டில் வைத்து யாரும் பிரசவம் செய்தார்களா?  என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  தூத்துக்குடியில் பிறந்த சில மணி நேரத்தில் பெண் குழந்தையை கடலில் வீசி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | பேருந்தில் பெண் குழந்தையை விட்டு சென்ற பெண்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link