National Award for Teachers: 2022 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதை, தமிழ்நாட்டில் இருந்து ஒரே ஓர் ஆசிரியர் அதுவும் தொடக்கப் பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன் பெற்றுள்ளார். மாணவர்களுக்கு ஆசிரியராகப் பணியாற்றி, இந்தியாவின் குடியரசுத் தலைவராக உயர்ந்தவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். அவரின் பணிகளைப் போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதை அடுத்து நாட்டில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு, இந்த நாளில் மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்கள் அனைவருக்கும் டெல்லியில் உள்ள விக்யான் பவனில் (அறிவியல் மாளிகை) ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 5-ம் தேதி, குடியரசுத் தலைவர் கையால் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தகுதி வாய்ந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன. விருதுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களில் தகுதியான ஆசிரியர்களை, அந்தந்த மாநில அரசுகள் பரிந்துரைப்பது வழக்கம். அந்த வகையில் தேசிய நல்லாசிரியர் விருதுக்க 6 ஆசிரியர்களை பள்ளிக் கல்வித்துறையின் தேர்வுக்குழு பரிந்துரை செய்தது.

இவர்களுக்கான நேர்காணல் தேர்வு, தேசிய அளவில் தனி நடுவரின் முன்னிலையில் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது. இதில் இருந்து, ராமநாதபுரம் மாவட்ட ஆசிரியர் கே.ராமச்சந்திரன் 2022ஆம் ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

மேலும் படிக்க: படியில் நிற்காதே என கண்டித்த ஓட்டுநர் மீது தாக்குதல்! பள்ளி மாணவர்கள் அட்டூலியம்!

குறையும் தமிழகப் பிரதிநிதித்துவம்

விருதுப் பட்டியலில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் ஆண்டுக்கு ஆண்டு குறைந்துகொண்டே வருகிறது. 2020ஆம் ஆண்டு ஆசிரியர்கள் சரஸ்வதி, திலிப் ஆகிய 2 பேர் விருது பெற்றனர். 2021ஆம் ஆண்டும் ஆசிரியர்கள் ஆஷா தேவி மற்றும் லலிதா என்னு இருவர் பெற்ற நிலையில், 2022ஆம் ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஒரே ஓர் ஆசிரியர் மட்டுமே தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

யார் இந்த ராமச்சந்திரன்?

ராமநாதபுரம் மாவட்டம், போகலூர் ஒன்றியத்தில், கீழாம்பல் கிராமம் உள்ளது. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் கே.ராமச்சந்திரன்.

கோவிட் கால உதவி

கொரோனா காலத்தில் அரசுப் பள்ளியில் படிக்கும் விளிம்புநிலைக் குழந்தைகளின் கல்வி தடைப்பட்டது. அவர்களுக்கு இணைய வழியில் கற்பிக்க முடிவெடுத்து, செல்போன்களைத் தனது சொந்த செலவில் வாங்கிக் கொடுத்தவர் ஆசிரியர் ராமச்சந்திரன். கிராமத்தில் உள்ள பட்டதாரிகளுக்கு டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்குப் பயிற்சி வழங்கி வருகிறார். இதன்மூலம் கிராமத்து இளைஞர்களை அரசு ஊழியர்களாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார். 

மேலும் படிக்க: வீடு தேடி பெண்களுக்கு வேலை வாய்ப்பு… முன்னேற்றத்திற்கான முன்னெடுப்பு

தொடக்கப் பள்ளிக்கு தனி யூடியூப் பக்கம்!

Students Skills என்ற பெயரில் யூடியூபில், கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு எனத் தனியாக கணக்கைத் தொடங்கி, மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொணர்ந்து வருகிறார். தமிழர்களின் தொன்மையும் பெருமையுமான திருக்குறளின் முக்கியத்துவத்தை மாணவர்களிடத்தில் விதைத்து வருகிறார். தொடக்கப் பள்ளி மாணவர்களுக்குத் திருக்குறளைக் கற்றுக் கொடுத்து, குறள்களை ஒப்புவிக்க வைக்கிறார். அதேபோல அரசின் திட்டங்களான எண்ணும் எழுத்தும் உள்ளிட்டவற்றையும் சிறப்புறக் கற்பித்து, யூடியூப் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார்.

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் ராமச்சந்திரனுக்குப் பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

மேலும் படிக்க: அமைச்சர் பொய்யாமொழி குறித்து சர்ச்சை: நாளேட்டை எரித்து ஆர்ப்பாட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link