தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அருகே குடும்ப தகராறில் 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே தொட்டபாவலி காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், விவசாயி. இவர் சொந்தமாக டிராக்டர் வைத்துள்ளார். இவருடைய மனைவி லட்சுமி (வயது 27). இவர்களுக்கு பிரசாந்த் (4) என்ற மகனும், 6 மாதத்தில் லதா என்ற பெண் குழந்தையும் இருந்தனர்.

கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த காணப்பட்ட லட்சுமி தனது இருகுழந்தைகளுடன் காணவில்லை உறவினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். இதனால் லட்சுமி குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்று இருப்பார் என்று கருதி மணிகண்டன், தன்னுடைய மாமனார் வீட்டுக்கு போன் செய்துள்ளார். அங்கு லட்சுமி செல்லவில்லை என்று கூறியுள்ளனர்.

மேலும் படிக்க | பிறந்த பச்சிளம் பெண் குழந்தையை கடலில் வீசி கொலை!

இந்தநிலையில் நேற்று மாலை கிராம மக்கள், மணிகண்டனின் தோட்டத்திற்கு சென்றனர். அப்போது அங்குள்ள கிணற்றில் லட்சுமி மற்றும் 6 மாத குழந்தை பிணமாக மிதந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்்து கூச்சலிட்டனர். தகவல் அறிந்த மணிகண்டன் மற்றும் குடும்பத்தினர் அலறி அடித்துக்கொண்டு கிணற்றுக்கு ஓடி வந்தனர். அங்கு அவர்கள் கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது. தகவல் அறிந்து மாரண்டஹள்ளி போலீஸ் மற்றும் பாலக்கோடு தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். கயிறு கட்டி 2 பேரின் உடல்களையும் மீட்டனர். அங்கு திரண்டு இருந்த லட்சுமியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உடல்களையும் பார்த்து கதறி அழுதனர். 

சோகம் தொடர்ந்து தீயணைப்பு படையினர் 4 வயது சிறுவனின் உடலை கிணற்றில் இருந்து மீட்டனர். மீட்கப்பட்ட 3 உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது குடும்ப தகராறில் குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று லட்சுமி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க: ’உத்தமர் போல பேசும் மகா நடிகர் ஓபிஎஸ்’ ஜெயக்குமார் கடும் தாக்கு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link