முன்னாள் மத்திய உரத்துறை அமைச்சராகவும், கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க.அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டதில் இருந்தே அமைதியாக இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த திமுக ஆட்சியின் போது மதுரை மாநகராட்சி முன்னாள் வடக்கு மண்டல தலைவராகவும், மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளருமான இசக்கி முத்து என்பவர் விபத்து ஒன்றில் சிக்கி உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். 

இந்நிலையில் தனது ஆதரவாளரான இசக்கி முத்துவை முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மதுரை கொடிக்குளம் பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.தொடர்ந்து இசக்கி முத்துவின் மருத்துவ செலவுக்கு பண உதவி அளித்தார்.

மேலும் படிக்க: பாஜகவுக்கு தண்ணிகாட்டும் ஹேமந்த் சோரன் -‘ஆபரேஷன் தாமரை’ ஜார்க்கண்டில் வெற்றிபெறுமா?

தொடர்ந்து மு.க.அழகிரியிடம் மீண்டும் மத்திய அமைச்சராக வர வாய்ப்புள்ளதா, மீண்டும் திமுகவில் இணைய வாய்ப்பு உள்ளதா, உதயநிதியும், துரை தயாநிதியும் இணைந்து செயல்படுவதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற செய்தியாளர்களின் கேள்விகளுக்கு மு.க.அழகிரி எந்த பதிலும் அளிக்காமல் சென்றுவிட்டார். தொடர்ந்து தனது ஆதரவாளர்களின் இல்லத்திருமண நிகழ்ச்சிகளுக்கு சென்று தனது ஆதரவாளர்கள் சந்தித்து வருகிறார்.

மேலும் படிக்க: நிதிஷ்குமார் – சந்திரசேகரராவ் சந்திப்பு : எதிர்க்கட்சிகளின் நகைச்சுவை என பாஜக விமர்சனம்

 மேலும் படிக்க: அதிகார போதையில் இருக்கிறீர்கள் : கெஜ்ரிவாலுக்கு அன்னா ஹசாரே எழுதிய கடிதம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Source link