மதுரை மாவட்டம் செய்திகள்: மேலூரில் இளம்பெண்ணை ஆசை வார்த்தை கூறி காதலித்து ஏமாற்றிய வழக்கில் சிறைக்கு சென்ற வாலிபர். பிணையிலிருந்து வந்தவுடன் சிறை வளாகத்திலே அப்பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மதுரை மாவட்டம் மேலூர் அருகே மணப்பட்டியை சேர்ந்த இளம்பெண் ரம்யாவும் பக்கத்து ஊரான கோட்டப்பட்டியை சேர்ந்த வாலிபர் அழகுராஜா ஆகிய இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு பின் காதலாக மாறியுள்ளது. (இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது) அழகுராஜா ரம்யாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பழகி வந்துள்ளனர். இந்தநிலையில் அப்பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கடந்த 2019 ஆம் ஆண்டு அழகுராஜை அவரது வீட்டிற்கு சென்று கேட்டுள்ளார். இதனால் தகராறு ஏற்பட்டுள்ளது. தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கொட்டாம்பட்டி காவல்நிலையத்தில் ரம்யா புகாரளித்தார்.

man married a woman in prison complex

மேலும் படிக்க: சைக்கோ கணவனின் கொடுமையால் தீக்குளித்த பெண்; சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

இப்புகாரின் அடிப்படையில் 2019 ஆம் ஆண்டு அழகுராஜா கைது செய்யப்பட்டு பிணையில் வந்தவுடன் சிங்கப்பூருக்கு தப்பிசென்றார். இவர் வெளிநாடு சென்றதால் கொட்டாம்பட்டி காவல்துறையினரால் லுக்அவுட் நோட்டீஸ் அப்போது வெளியிடப்பட்டது.

Sub Division Jail

இந்தநிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊர் திரும்பி வந்த அழகுராஜா லுக்அவுட் நோட்டீஸ் காரணமாக போலீசார் பிடித்து கொட்டாம்பட்டி காவல்துறையினருக்கு புகார் அளித்தனர். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு மேலூரிலுள்ள கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

மீண்டும் இன்று இந்த வழக்கில் பிணையில் வெளிவந்த அழகுராஜா, காதலித்து ஏமாற்றிய ரம்யாவை சிறையைவிட்டு வெளியே வந்தவுடன் அடுத்த நிமிடமே சிறை வளாகத்தில் உள்ள காளியம்மன் கோயிலில் ரம்யாவை தாலிகட்டி திருமணம் செய்துகொண்டார்.

மேலும் படிக்க: வளைகாப்பு நடத்த கேட்டதால் ஆத்திரம்… கர்பிணி மனைவியை துடிதுடிக்க கொன்ற கணவன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Source link