தமிழ் திரைப்படங்களில் பல்வேறு காமெடி கதாபாத்திரத்தில் நடித்த போண்டாமணி என அழைக்கப்படும் கோடீஸ்வரன், சென்னை ஐயப்பன் தாங்கலில் வசித்து வருகிறார், கடந்த வாரம் போண்டா மணி உடல்நிலை சரியில்லாமல் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கிட்னி அறுவை சிகிச்சை செய்த பின்னர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் பிரதீப் என்பவர் போண்டாமணியிடம் வந்து நலம் விசாரிப்பது போல் நெருக்கமாக பழகி உள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் 27 ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அனுப்பப்பட்டார், வீட்டிற்கு செல்லும் வழியில் போண்டாமணி செலவிற்கு பணம் வேண்டும் என்பதால் அவருடன் இருந்த ராஜேஷ் பிரித்திவிடம் அவரது ஏடிஎம் கார்டை போண்டாமணியின் மனைவி மாதவி மூலமாக ராஜேஷிடம் ஏடிஎம் கார்டை கொடுத்து பணம் எடுத்து வர சொல்லி அனுப்பி உள்ளார், ஆனால் சில மணி நேரங்கள் ஆகியும் அவர் திரும்பாத காரணத்தினால் சந்தேகமடைந்த போண்டாமணி அவரது வங்கி கணக்கில் சோதித்தபோது, 1,04,941 ரூபாய்க்கு உம்முடி பங்காரு நகைக்கடையில் நகை எடுத்துள்ளதாக குறும் செய்தி வந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் படிக்க | போண்டா மணியின் மருத்துவ செலவு – முழுமையாக ஏற்றது அரசு

இந்த சம்பவத்தை குறித்து போண்டாமணியின் மனைவியின் மனைவி மாதவி சென்னை போரூர் எஸ் ஆர் எம் சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் நேற்று ராஜேஷ் பிரதிவை கைது செய்து விசாரணை நடத்தினர், விசாரணையில் அவர் திருப்பூர் மாவட்ட சேர்ந்தவர் என்றும் இவர் மீது ஏற்கனவே கோவை மாவட்டத்தில் இரண்டு வழக்குகளும் சென்னை எழும்பூரில் இரண்டு வழக்குகளும் உள்ளதாக தெரியவந்தது, இவர் தினேஷ், சிவராம்,குரு, தீனதயாளன், ராஜேஷ்,பெருமாள்,என்ற மற்றொரு பெயர்களுடன் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதும் கண்டறியப்பட்டது, விசாரணை பின்பு அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க | கீழ்ப்பாக்கம் மனநல காப்பக முன்னாள் உதவி காசாளருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link