மதுரை தோப்பூரில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக நிதியை ஒதுக்கி, பணியை துரிதப்படுத்த உத்தரவிட வேண்டும் என கே.கே.ரமேஷ் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணையின் போது மத்திய அரசு 36 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் முடிவடையும் என தெரிவித்திருந்தது இதனையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆனால், எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தற்போது வரை தொடங்கப்படவில்லை. நீதிமன்ற உத்தரவு முறையாக பின்பற்றப்படவில்லை. 

எனவே, மத்திய முதன்மைச் செயலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை கொண்ட வழக்கு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? என்பது குறித்து முடிவெடுக்க நீதிபதிகள் ரமேஷ் மற்றும் புகழேந்தி அமர்வு முன்பு பட்டியலிடப்பட்டது. அப்போது மத்திய அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக 1977.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான காலம் 5 வருடம் 8 மாதம் (மார்ச் 2021 முதல் அக்டோபர் 2026) ஆகும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

மேலும், அதிக செலவு மற்றும் அதிக நேரத்திற்கான அனுமதி மத்திய சுகாதாரத்துறை அனுமதி வழங்கி செலவின துறை பரிசீலனையில் உள்ளது. மதுரையிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை எம்பிபிஎஸ் படிப்பு ராமநாதபுரம் தற்காலிக கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குனர் மற்றும் நிர்வாக துணை இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளனர் என மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 

மேலும் படிக்க | ஷ்ரத்தா கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற முடியாது: டெல்லி உயர்நீதிமன்றம்

மேலும், இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கூடாது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், எவ்வாறு அக்டோபர் 2026ல் பணிகள் முடிவடையும் என்பது குறித்த நிலை அறிக்கையை மத்திய முதன்மை செயலர் தாக்கல் செய்ய உத்தரவிட்டு மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தனர்.

மேலும் படிக்க | 11 எம்.எல்.ஏக்களை அதிரடியாக சஸ்பெண்ட் செய்த டெல்லி பாஜக

மேலும் படிக்க | பேரத்தில் ஈடுபட்டதா பாஜக…? – தெலுங்கானாவில் முக்கிய நிர்வாகிக்கு சம்மன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link