காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து நேற்று மாலை 5.30மணியளவில் காஞ்சிபுரத்திலிருந்து புரிசைக்கு செல்லும் அரசு பேருந்து புறப்பட்டு செல்லும் போது அந்த அரசு பேருந்தின் முன் படியில் பள்ளி மாணவர்கள் நான்கு பேர் தொங்கியவாறு பயணித்துள்ளனர்.  இதனையெடுத்து பேருந்து ஓட்டுநர் ரமேஷ் மேலே எறி வரும் படி கூறியுள்ளார். இதனால் ஓட்டுநருடன் பள்ளி மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் பேருந்து நிலைய பின்புறம் பகுதியில் பேருந்தினை நிறுத்தி அம்மாணவர்களிடம் படியில் பயணித்ததால் பேருந்தைவிட்டு இறங்க சொல்லியிருக்கிறார் பேருந்து ஓட்டுநர்.

மேலும் படிக்க | நாமக்கல் மாவட்டம் வெப்படையில் தனியார் நிதி நிறுவன உரிமையாளர் கடத்திக்கொலை 

இதனால் கொந்தளித்த பள்ளி மாணவர்கள் ஓட்டுநரின் கண்ணத்தில் அறைந்துவிட்டு கற்களை கொண்டு ஓட்டிநரை தாக்கி தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனையெடுத்து பொதுமக்கள் ஒன்று சேரவே அங்கிருந்து மாணவர்கள் நான்கு பேரும் தப்பியுள்ளனர்.  அவர்களில் ஒரு மாணவனை பிடித்த 40வயது மதிக்கதக்க ரஜினி என்பவரை அம்மாணவன் தாக்கிய நிலையில் இதில் தலையில் பலந்த காயமுற்று இரத்தம் சொட்டியுள்ளது. இதனால் ஆவேசமடைந்த பொதுமக்களே அம்மாணவனை பிடித்து பிடித்து சிவகாஞ்சி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

kanchipuram

பள்ளி மாணவனால் தாக்கப்பட்ட மற்றும் பொதுமக்கள் மாணவனை பிடித்த காட்சிகள் சமூக வளைதளங்களில் தற்போது வைராக பரவி வருகிறது.  தமிழகத்தில் அண்மை நாட்களாகவே பள்ளி,கல்லூரி மாணவர்கள் பொது இடங்களில் ஒழுங்கின செயல்களில் ஈடுபடுவதும், வகுப்பறையில் மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்களுக்கு ஆளாகும் வீடியோக்கள் சமூக வளைதளங்களில் பரவி அடங்கிய நிலையில் மீண்டும் தற்போது தலையெடுக்க தொடங்கியுள்ளது.

மேலும் படிக்க | கட்டைக் காலுடன் வாகன திருட்டில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளி 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link