ஜப்பானை சேர்ந்த பிரபல நடிகை மியா சாகி மசூமி, நடிகையாக இருந்து பணம் பெயர் புகழ் சம்பாதித்த அவர் மனநிம்மதி இன்று இருந்து வந்ததாகவும், தமிழ் மொழி மற்றும் சித்தர்கள் பற்றி கேள்விப்பட்டு ஜப்பானில் அவர்கள் பற்றி அறிந்து கொண்டதாகவும், தொடர்ந்து ஜப்பானில் உள்ள ஹராமுரா என்ற தனது சொந்த கிராமத்தில் தமிழ் பாரம்பரிய முறைப்படி இயற்கை முறையில் நெல் நடவு செய்து, தமிழ்நாட்டில் இருப்பது போல் நடவு பாடல்களை பாடி ரசாயன கலப்பில்லாமல் நெல் பயிர் செய்ததாகவும் அந்த பயிருக்கு முருகா என்று பெயரிட்டு அறுவடை செய்துள்ளார்.

அறுவடை செய்த நெல்லை அரிசி ஆக்கி தமிழகத்திற்கு எடுத்து வந்து பல்வேறு ஆலயங்களுக்கும் அளித்து வருகிறார். அதன்படி இன்று மயிலாடுதுறை வந்த ஜப்பான் நடிகை மற்றும் அவரது ஐந்து பேர் கொண்ட குழுவினர் மாயூரநாதர் ஆலயத்தில் அமைந்துள்ள தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான குமரக்கட்டளை சன்னதியில் ருத்ர யாகம் செய்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து மாயூரநாதர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்து வழிபாடு நடத்தினர்.

அதனை அடுத்து மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு நேரில் சென்று ஆதின குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியாரை நேரில் சந்தித்து ஆசி பெற்று தனது வயலில் விளைந்த முருகா நெல்லின் அரிசியை காணிக்கையாக சமர்ப்பித்தார். ஜப்பானில் முருகன் ஆலயம் அமைக்க உள்ளதாகவும் அதற்கு ஆதீனம் வருகை தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் படிக்க | வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்திற்கு ரெட் அலெர்ட் 

ஆதீனம் சார்பில் ஜப்பான் நடிகைக்கு முருகன் சிலை மற்றும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் படம் பிரசாதமாக வழங்கப்பட்டது. முன்னதாக மயூரநாதர் ஆலயத்தில் முருகன் மற்றும் சிவன் குறித்து தமிழ் பக்தி பாடல்களை நெஞ்சுருக பாடி வழிபட்டது அனைவரையும் கவர்வதாக இருந்தது. ஜப்பான் நடிகை பேசும்போது தமிழ் மொழி கலாச்சாரம் தன்னை கவர்ந்ததாகவும், இது பற்றி படிக்க ஆரம்பித்த பின்னரே தனக்கு மன நிம்மதி கிடைத்ததாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மேலும் படிக்க | துலாமில் இணையும் புதன்-சுக்கிரன்; லக்ஷ்மி நாராயண யோகம் பெறும் ‘3’ ராசிகள்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link