பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்தியை கட்டாயமாக்க அனைத்து வழிகளிலும் முயல்கிறதென்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டிவருகின்றன. அதற்கேற்றார்போல்தான் ஒன்றிய அமைச்சர்களின் கருத்தும் இருக்கிறது. அதுமட்டுமின்றி மத்தியப் பல்கலைக்கழகங்கள் உள்பட அனைத்து தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழியாக இந்தியை கட்டாயமாக்க வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.

கடந்த மாதம், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு இதுகுறித்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில், ஆங்கிலம் மிகவும் அவசியமான இடங்களில் மட்டுமே பயிற்றுவிக்கும் மொழியாக இருக்க வேண்டும். அந்த நிறுவனங்களில் படிப்படியாக ஆங்கிலத்திற்கு பதில் இந்தியை மாற்றாக கொண்டுவர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.

Bengal

அதன்படி, நாடு முழுவதும் உள்ள இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி திணிக்கப்படுவதாக போராட்டங்கள் நடத்தப்பட்டுவருகின்றன. அதேபோல், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகளும், கண்டனங்களையும் வெளியிட்டு வருகின்றனர். இந்தச் சூழலில் மேற்குவங்கத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக பேரணி நடத்தப்பட்டது.

பங்களா போக்கா என்ற அமைப்பு சார்பில் நேற்று கொல்கத்தாவில் நடந்த பேரணியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது இந்தி திணிப்புக்கு எதிராக வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மக்கள் ஏந்தி வந்தனர். அப்போது சிலர் ஏந்தி வந்த பதாகைகளில், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.

 

திராவிட முன்னேற்ற கழகம் கட்சி அண்ணாவால் தொடங்கப்பட்டபோது இந்தி திணிப்பு கூடாது, சமத்துவமும், சமூக நீதியும் வேண்டும் என்பதே அடிநாத கொள்கையாக வைக்கப்பட்டது. மேலும், அந்தக் கட்சி இந்தி திணிப்புக்கு எதிராக கடந்த 1965ஆம் ஆண்டு போராட்டத்தை வீரியமாக நடத்தியது. அந்தப் போராட்டத்தைக் கண்ட அப்போதைய இந்தி ஆதரவாளர்கள் சற்று மிரண்டே போனார்கள் என்றுதான் சொல்லவேண்டும். 

முக்கியமாக திமுக அதற்கு அடுத்து நடந்த தேர்தலில் (1967) மாபெரும் வெற்றி பெற்று தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தை தமிழ்நாட்டிலிருந்து அகற்றி தொடர்ந்து தமிழகத்தை ஆட்சி செய்தது, தற்போதும் செய்துவருகிறது. தற்போதைய திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் இந்தி திணிப்புக்கு எதிராக காத்திரமான கருத்துக்களை தெரிவித்துவருகின்றார்.

 

இப்படிப்பட்ட நிலைமையில், மேற்குவங்கத்தில் நடந்த இந்தி திணிப்புக்கு எதிரான பேரணியில் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றதை கண்ட இணைய உடன் பிறப்புகள், இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு என்ற விதையை போட்டது இவர்கள் இருவர்தான் என அதிகம் பகிர்ந்துவருகின்றனர். இதற்கிடையே, தமிழ்நாட்டிலும் திமுக சார்பில் இந்தி திணிப்புக்கு எதிராக வரும் 15ஆம் தேதி போராட்டம் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | திருநங்கைகளுக்கு காட்டுக்குள் நடந்த கொடுமை! அதிரடி காட்டிய போலீஸ்! என்ன நடந்தது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link