இந்தியாவின் சிலைகளை திருடி வெளிநாடுகளில் விற்பனை செய்யும் சுபாஷ் சந்திர கபூர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு சிலைகள் கடத்தலில் ஈடுபட்டதாக 2008ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டேன். இந்த வழக்கு கும்பகோணம் நீதிமன்றத்தில் சாட்சியங்கள் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். நீதிமன்றத்தில் ஏற்கனவே விசாரணை செய்த சாட்சியங்களை மீண்டும் விசாரிக்க வேண்டும் என கும்பகோணம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது இந்த வழக்கை தள்ளுபடி செய்து கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே, கும்பகோணம் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்து மீண்டும் சாட்சியங்களை விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும்.” என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சக்திகுமார் சுகுமார குரூப் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், கால அவகாசம் கோரப்பட்டது. இதனை தொடர்ந்து அரசு தரப்பில், 5 வருடங்களாக இந்த வழக்கின் சாட்சியங்கள் விசாரணை கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.  இந்த வழக்கின் விசாரணையை தாமதப்படுத்துவதற்காக மனுதாரர் தரப்பில் சாட்சியங்களை மீண்டும் விசாரணை செய்ய வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படியே கும்பகோணம் நீதிமன்றத்தில் மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என வாதம் வைக்கப்பட்டது.

மேலும் படிக்க | வண்டலூருக்கு முதல்வர் வருகை – வெயிலில் வாடிய வதங்கிய பொதுமக்கள்

இதனையடுத்து நீதிபதி, “அரசு தரப்பில் தெரிவித்ததை போல் வழக்கு விசாரணையை தாமதப்படுத்துவதற்காகவே மனுதாரர் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் கால அவகாசம் கோரி வருகிறார்.  இந்த வழக்கு விசாரணை செப்டம்பர் 27ஆம் தேதி ஒத்திவைக்கப்படுகிறது அன்று மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை என்றால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு கும்பகோணம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை தொடர உத்தரவிடப்படும்” என தெரிவித்தார்.

மேலும் படிக்க | அண்ணா பிறந்தநாள் : நன்னடத்தை காரணமாக கைதிகள் படிப்படியாக விடுவிப்பு

மேலும் படிக்க | TN Weather Forecast: இந்த மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Source link